1995 கோகிமா படுகொலை
1995 கோகிமா படுகொலை (1995 Kohima Massacre) என்பது 1995, மார்ச் 5 அன்று இந்திய இராணுவத்தால் ;sh/flljjoold ஆகும். இந்திய இராணுவத்தின் 16 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படைகள் நாகாலாந்தின் தலைநகரான கோகிமா வழியாக பயணித்துக்கொண்டிருந்தபோது பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. [1] [2] ஆயுதம் ஏந்திய துருப்புக்கள் சென்ற வாகனத் தொடரணியில் இருந்த ஒரு வாகனத்தின் வட்டகை (டயர்) வெடித்ததை வெடிகுண்டுத் தாக்குதல் சத்தம் என்று தவறாக நினைத்து படையினர் பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். [3] நிகழ்வு1995 மார்ச் 5 அன்று மணிப்பூரின் பிஷ்ணுபூரிலிருந்து நாகாலாந்தின் திமாபூருக்கு செல்லும் வழியில் 16 ராஸ்திரிய ரைபிள்ஸ் (ஆர்ஆர்) வாகனத் தொடரணி கோஹிமா வழியாகச் சென்று கொண்டிருந்தது. 5 கிமீக்கு மேல் நீண்ட ஆயுதமேந்திய வாகனத் தொடரணி சென்று கொண்டிருந்தது. அதில் ஐந்து அதிகாரிகள், 15 ஜேசிஓக்கள் மற்றும் 400 படை வீரர்களை சுமந்துகொண்டு அறுபத்து மூன்று வாகனங்கள் இருந்தன. கொகிமாவில் மக்கள் அடர்த்தி நிறைந்த பகுதியான ஏஓசி மற்றும் பிஓசி பகுதியை தொடரணி கடக்கும்போது, வாகனம் ஒன்றின் வட்டகை வெடித்து. இதனால் ராணுவ வீரர்கள் உடனடியாக தாக்குதல் நடத்தத் தொடங்கினர். தங்கள் வாகனத்தின் வட்டகைதான் வெடித்தது என்பதை அறியாமல், ஆயுதம் ஏந்திய துருப்புக்கள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 1,207 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஐந்து சுற்று மோட்டார் துப்பாக்கிச் சூடு ஆகியவை அடங்கும். மதியம் 1:30 க்கு துப்பாக்கிச் சூடு துவங்கியது. பிற்பகல் 3:30 க்குப் பிறகு மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டதும், 36 பேர் காயமடைந்ததும் அறியவந்தது. ராஸ்திரிய ரைபிள்ஸ் படையினர் வேண்டுமென்றே பொதுமக்களின் சொத்துக்களை தாக்கினர், கட்டிடங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தினர். அதன் பின்னர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia