2,4,6-மும்மெத்திலனிலின்
2,4,6-மும்மெத்திலனிலின் ( 2,4,6-Trimethylaniline) C9H13N என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக் அமீனான இச்சேர்மம் சாயங்கள் தயாரிப்பிற்கு ஒரு முன்னோடியாக இருப்பதால் வர்த்தக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மெசிட்டைலின் சேர்மத்தை தெரிவுசெய்த ஒற்றை நைட்ரோ ஏற்றம் செய்து 2,4,6-மும்மெத்திலனிலின் தயாரிக்கப்படுகிறது. மெத்தில் தொகுதிகளை ஆக்சிசனேற்றம் அடையவிடாமல் தவிர்த்து, வினையில் விளையும் நைட்ரோ சேர்மத்தை ஒடுக்கம் செய்தால் இந்த அனிலினைப் பெறலாம்[1] அணைவுச்சேர்ம வேதியியல்பல்வேறு வகையான பருமனான ஈதல் தொகுதிகளுக்கு கட்டுறுப்பாக 2,4,6-மும்மெத்திலனிலின் பயன்படுகிறது. கிளையாக்சாலுடன் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் 1,2-ஈரிமின் ஈதல் தொகுதிகள் உருவாகின்றன. கிளையாக்சால் மற்றும் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்மங்களின் ஆவிசுருக்க வினையில் மஞ்சள் நிரத்திண்மமாகத் தோன்றும் கிளையாக்சால்-பிசு(மெசிட்டைலிமின்) சேர்மத்தை ஒரு உதாரணமாகக் கூறலாம். கரிம ஈதல் தொகுதிகள் உள்ளிட்ட பரவலாக அறியப்பட்ட பல்லினவளைய கார்பீன் ஈதல் தொகுதிகளுக்கு முன்னோடியாக இந்த ஈரிமின்கள் பயன்படுகின்றன[2]. இரண்டாம் தலைமுறை கிரப்சு வினையூக்கிகளில் காணப்படும் என் – பல்லினவளைய கார்பீன்கள் இச்சேர்மத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன[3] 1,3-இருகீட்டோனுடன் சேர்த்து ஆவிசுருக்க வினைக்கு உட்படுத்தினால் எதிரயனி இருகவர் வகையிலான ஈதல் தொகுதி கிடைக்கிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia