2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால்
2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால் (2,4-Dichlorobenzyl alcohol) என்பது C7H6Cl2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஓர் இலேசான நுண்மித்தடுப்பியாகும். வாய் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய பாக்டீரியா மற்றும் வைரசுகளை இது கொல்லும். இருமல், வற்ட்டு இருமல் தொண்டை வலி தொடர்பான மருந்து மாத்திரைகளில் இச்சேர்மம் ஓர் உட்கூறாக உள்ளது. ஐரோப்பிய தயாரிப்பான நியோ போரோசிலினாவின் மூலப்பொருளாகவும் 2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால் உள்ளது.[1] இருகுளோரோபென்சைல் ஆல்ககால் (1.2 மி.கி.) மற்றும் அமைல்ல்மெட்டாகிரெசால் (0.6 மி.கி.) கொண்ட குறைந்த காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவு கொண்ட மாத்திரையானது சுவாச ஒத்திசைவு வைரசு மற்றும் சார்சு-கோவிட்டு நுண்ணுயிரிகளை செயலிழக்கச் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் அடினோவைரசு அல்லது ரைனோவைரசு இதனால் பாதிக்கப்படவில்லை.[2] 10% சோடியம் பென்சோயேட்டு மற்றும் 0.3% இருகுளோரோபென்சைல் ஆல்ககால் கொண்ட ஒரு பல் மருந்து, பல் துலக்கிய பிறகு 5 முதல் 10 நிமிடங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்பாட்டை பராமரிக்கிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia