2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் (2-Ethylhexyl glycidyl ether) என்பது எபோக்சி ரெசின்களின் பாகுத்தன்மையைக் குறைக்கப் பயன்படும் தொழில்துறை வேதிப்பொருளாகும்.[1]நீர்ம கரிம மூலக்கூறான இச்சேர்மம் C11H22O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது.[2] இவை பின்னர் பசைகள், முத்திரை மெழுகுகள் மற்றும் வண்ணப்பூச்சுகள் அல்லது பூச்சுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இதன் சிஏசு எண் பதிவு 2461-15-6 என்று அடையாளப்படுத்துகிறது.[3][4][5]ஐயுபிஏசி முறையில் 2-(2-எத்திலெக்சாயிமெத்தில்)ஆக்சிரேன் என்ற பெயர்ர்ல் அழைக்கப்படுகிறது. பலபடி அடிப்படையிலான மற்ற பயன்பாடுகளிலும் 2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் பயன்படுத்தப்படுகிறது.[6]
தயாரிப்பு
2-எத்தெலெக்சனாலும் எபிகுளோரோ ஐதரினும் இலூயிசு அமில வினையூக்கியின் முன்னிலையில் சுருக்க வினையில் ஈடுபட்டு ஆலோ ஐதரின் உருவாகிறது. தொடர்ந்து வினைக்கலவையை கடுங்கார ஐதரோகுளோரைடு நீக்கவினைக்கு உட்படுத்தினால் 2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் உருவாகிறது.[7][8]நீர், சோடியம் குளோரைடு மற்றும் அதிகப்படியான சோடியம் ஐதராக்சைடு போன்றவை கழிவுப் பொருள்களாகும். தரக்கட்டுப்பாட்டு சோதனைகளில் ஒன்று எபோக்சியின் சமான எடையை தீர்மானிப்பதன் மூலம் எபோக்சி மதிப்பு அளவிடப்படுகிறது.
வணிகம்
அமெரிக்காவில் உள்நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும் 2-எத்திலெக்சைல் கிளைசிடில் ஈதர் உற்பத்தி செய்யப்படுகிறது.[9] 2019 ஆம் ஆண்டில் சீனாவிலிருந்து 13 மில்லியன் கிலோவுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டது.[10] எபோக்சி பிசின் நீர்த்துப்போகமல் இருக்கப் பயன்படுத்தப்படுவதோடு, அழகுசாதனப் பொருட்களைத் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.[11]
பாதுகாப்பு
தயாரிப்பின் பாதுகாப்பு நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இச்சேர்மம் ஒரு தோல் உணர்திறன் மிக்கது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.[12][13][14][15]
↑SpadŁo, M. & Iwański, L. & Pokorska, Z.. (2004). The effect of catalyst type on the synthesis of 2-ethylhexyl glycidyl ether. Przemysl Chemiczny. 83. 133-136.
↑Chem, A. A. L. "ME 102". www.aalchem.com (in ஆங்கிலம்). Retrieved 2022-03-23.