2-ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம்
2-ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம் (2-Hydroxybutyric acid) என்பது C4H8O3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இந்த ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்தை ஆல்பா- ஐதராக்சி பியூட்டரேட்டு மற்றும் α- ஐதராக்சி பியூட்டரேட்டு என்ற பெயர்களாலும் அழைப்பர். இச்சேர்மத்தில் உள்ள கார்பாக்சில் குழுவிற்கு அடுத்து இடம்பெற்றுள்ள கார்பனுடன் ஐதராக்சில் குழு சேர்ந்திருக்கிறது. டி-2- ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம், எல்-2- ஐதராக்சி பியூட்டைரிக் அமிலம் என்ற இரண்டு எதிருருக்களைப் பெற்றுள்ள ஒரு நாற்தொகுதிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது.
2-ஐதராக்சிபியூட்டைரிக் அமிலத்தின் இணை காரமான 2-ஐதராக்சிபியூட்டைரேட்டு எல்-திரியோனின் சிதைமாற்றம் செய்யும் அல்லது குளூட்டாதயோன் தயாரிக்கும் பாலூட்டிகளின் தசைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆக்சிசனேற்ற அழுத்தம் அல்லது நச்சேற்ற நீக்கத் தேவைகளால் குளூட்டாதயோன் தயாரிக்கும் வேகம் அதிகரிக்கிறது. இத்தகைய வளர்சிதை மாற்ற அழுத்த நிபந்தனைகளால் குளூட்டாதயோன் தயாரிப்புக்குத் தேவையான எல்-சிசுட்டின் வழங்கல் கட்டுபடுத்தப்படுகிறது. எனவே மெத்தியோனின் தயாரிக்கும் மெத்திலேற்ற மாற்ற வழிமுறையிலிருந்து சிசுட்டாதயோனின் தயாரிக்கும் சல்பியுரேற்ற மாற்ற வழிமுறைக்கு ஓமோசிசுட்டின் திசைதிருப்பப்படுகிறது. சிசுட்டாதயோனின் சிசுட்டினாக பிளவுபடும்போது உடன்விளை பொருளாக 2-ஐதராக்சிபியூட்டைரேட்டு வெளிவிடப்படுகிறது. α-ஐதராக்சிபியூட்டைரேட்டு நீரிழிவு இல்லாத உயிரினங்களில் இன்சுலின் தடை காட்டியாக பயன் படுத்தப்படுகிறது[1]. குளுக்கோசு ஏற்புத்திறன் மோசமாதலை முன்கனிக்கவும் α-ஐதராக்சிபியூட்டைரேட்டு பயன்படுத்தப்படுகிறது[2] . மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia