2-குளோரோநாப்தலீன்
2-குளோரோநாப்தலீன் (2-Chloronaphthalene) என்பது C10H7Cl என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] கரிமகுளோரின் சேர்மமான இது நாப்தலீனின் குளோரினேற்ற வழிப்பெறுதியாகக் கருதப்படுகிறது. 2-குளோரோநாப்தலீன் சேர்மம் 1-குளோரோநாப்தலீன் சேர்மத்தின் மாற்றியமாகும்.[3] தயாரிப்புநாப்தலீனை குளோரினேற்றம் செய்து நேரடியாக 2-குளோரோநாப்தலீன் சேர்மத்தை தயாரிக்க இயலும். ஆனால் இவ்வினையில் 1-குளோரோநாப்தலீன், 2-குளோரோநாப்தலீன் ஆகிய ஒற்றைக்குளோரினேற்ற சேர்மங்களுடன் கூடுதலாக இருகுளோரோ நாப்தலீன் மற்றும் முக்குளோரோ நாப்தலீன் ஆகிய சேர்மங்களும் உருவாகும்.[4] பண்புகள்2-குளோரோநாப்தலீன் எரியக்கூடிய வேதிப்பொருளாகும். வெள்ளை நிறத்தில் மணமற்று ஒரு திண்மப்பொருளாக இது காணப்படுகிறது. நடைமுறையில் தண்ணீரில் கரையாது. இந்த சேர்மம் வலுவான ஆக்சிசனேற்ற முகவர்களுடன் வினைபுரியும்.[5] பயன்பாடுகள்2-குளோரோநாப்தலீன் புலரின்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. [6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia