2-சயனோகுவானிடின்
2-சயனோகுவானிடின் (2-Cyanoguanidine) என்பது C2H4N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குவானிடின் சேர்மத்திலிருந்து வழிப்பொருளாக வருவிக்கப்படும் நைட்ரைல் சேர்மம் இதுவாகும். சயனமைடினுடைய இருபடிச் சேர்மமாகவும் இது கருதப்படுகிறது. சயனமைடில் இருந்தே 2-சயனோகுவானிடின் தயாரிக்கப்படுகிறது. இதுவொரு நிறமற்ற திண்மமாகும். தண்ணீர், அசிட்டோன், ஆல்ககால் போன்ற முனைவுக் கரைப்பான்களில் 2-சயனோகுவானிடின் கரைகிறது. பென்சீன், எக்சேன் போன்ற முனைவற்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைவதில்லை[1]. தயாரிப்பும் பயனும்சயனமைடுடன் ஒரு காரத்தைச் சேர்த்து சூடுபடுத்தி 2-சயனோகுவானிடினைத் தயாரிக்கிறார்கள். சயனமைடு சேர்மம் சிதைக்கப்படுவதால் மண்ணில் இது உருவாகிறது. 2-சயனோகுவானிடின், குவானிடின்கள், மெலாமைன்கள் போன்ற சேர்மங்களிலிருந்து பல்வேறு வகையான பயனுள்ள பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, அசிட்டோகுவானமைன், பென்சோகுவானமைன் போன்ற கரிமச் சேர்மங்கள் சயனோகுவானிடினுடன் நைட்ரைலைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதால் தயாரிக்கப்படுகிறது:[2][3]
சயனோகுவானிடினை மெது உரமாகவும் பயன்படுத்துகிறார்கள். முன்னதாக இது சில வெடிபொருட்களில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டது. பிசின் தொழிற்சாலைகளில் ஈப்பாக்சி பிசின்களை நீராற்றும் முகவராகவும் பயன்படுத்துகிறார்கள்[1] வேதியியல்2-சயனோகுவானிடின் இரண்டு வகையான வடிவ மாற்றியங்களைக் கொண்டுள்ளது. இவை புரோட்டானேற்றத்திலும் நைட்ரைல் குழு இணைந்துள்ள நைட்ரசன் அணுவுடன் ஏற்பட்டுள்ள பிணைப்பிலும் வேறுபடுகின்றன. நைட்ரசன்களின் முறை சார்ந்த அமில கார வினை வழியாக உருவாகி இருமுனை அயனியாகவும் 2-சயனோகுவானிடின் காணப்படுகிறது. இருமுனை அயனி வடிவிலிருந்து அமோனியா (NH3) நீக்கமும் தொடர்ந்து எஞ்சியுள்ள மைய நைட்ரசன் அணுவின் புரோட்டான் நீக்கத்தாலும் டைசயனமைடு [N(CN)2]− எதிர்மின் அயனி உருவாகிறது. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia