2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு
2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு (2-Phenethyl propionate) என்பது C11H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும்.[2] பீனெத்தில் புரோபனோயேட்டு, பீனைல்யெத்தில் புரோப்பியோனேட்டு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பீனெத்தில் ஆல்ககால் மற்றும் புரோப்பியோனிக் அமிலத்தின் எசுத்தராக இச்சேர்மம் கருதப்படுகிறது. நிலக்கடலையில் இயற்கையாக 2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு காணப்படுகிறது.[3] 2-பீனெத்தில் புரோப்பியோனேட்டில் பூசண எதிர்ப்பு செயல்பாடு காணப்படுகிறது.[4] ஒரு பூச்சிக் கொல்லியாகவும் இது சோதித்துப் பார்க்கப்பட்டது.[5] மூட்டைப் பூச்சிகள்[6] மற்றும் பிற பூச்சிக்கொல்லி பொருட்களின் நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் சில தயாரிப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது.[7] அமெரிக்காவில் 2-பீனெத்தில் புரோப்பியோனேட்டு ஒரு "குறைந்தபட்ச ஆபத்து பூச்சிக்கொல்லி" என்று கருதப்பட்டு எந்தவொரு பதிவும் இல்லாமல் பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துகிறார்கள்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia