2-புரோமோபியூட்டேன்
2-புரோமோபியூட்டேன் (2-Bromobutane) என்பது 1-புரோமோபியூட்டேன் சேர்மத்தின் ஒரு மாற்றியமாகும். இவ்விரண்டு சேர்மங்களும் C4H9Br என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஈரிணைய பியூட்டைல் புரோமைடு அல்லது மெத்திலெத்தில்புரோமோமெத்தேன் என்ற பெயர்களாலும் 2-புரோமோபியூட்டேன் அழைக்கப்படுகிறது. இச்சேர்மத்தில் ஆலசனான புரோமின் கலந்திருப்பதால் ஆல்கைல் ஆலைடுகள் என்ற பெருவகைப்பாட்டு சேர்மங்களில் ஒன்றாகவும் 2-புரோமோபியூட்டேன் கருதப்படுகிறது. ஒரு நிறமற்ற திரவமாக உள்ள 2-புரோமோபியூட்டேன் இனிமையான வாசனையைக் கொண்டுள்ளது. புரோமினுடன் இணைக்கப்பட்ட கார்பன் அணு மற்ற இரண்டு கார்பன்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால் 2-புரோமோபியூட்டேன் மூலக்கூறை இரண்டாம் நிலை ஆல்கைல் ஆலைடு என குறிப்பிடுகிறார்கள். ஒப்பீட்டளவில் நிலைப்புத்தன்மை கொண்ட 2-புரோமோபியூட்டேன் நச்சுதண்மை கொண்டதாகவும் தீப்பற்றி எரியக்கூடியதாகவும் உள்ளது. ஒரு வலிமையான காரத்துடன் சேர்த்து சூடுபடுத்தப்பட்டால் 2-புரோமோபியூட்டேன் ஒருபடிநிலை நீக்கல் வினைக்கு உட்படுகிறது. இவ்வினை ஓர் இருமூலக்கூறு நீக்குதல் வினையாகும். இதன் விளைவாக ஓர் ஆல்க்கீன் இரட்டைப் பிணைப்பு கொண்ட 2-பியூட்டீன் உருவாகிறது. 2-புரோமோபியூட்டேன் எரிச்சலூட்டும் வேதிச் சேர்மமாகும். இதை உட்கொண்டால் தீங்கு விளைவிக்கும். தோல் மற்றும் கண்களில் பட்டால் எரிச்சலூட்டும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia