2-மீதாக்சிஎத்தனால் (2-Methoxyethanol) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டினை உடைய ஒரு கூடிய கரிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மம் முக்கியமாக ஒரு கரைப்பானாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ஈதர் போன்ற மணத்தை உடைய, தெளிவான, நிறமற்ற திரவமாகும். இது பல்வேறு வகையான வேதிச் சேர்மங்களை கரைக்கும் தன்மைக்காகவும், நீர் மற்றும் இதர கரைப்பான்களுடன் கலக்கும் தன்மைக்காகவும் அறியப்பட்ட கிளைகோல் ஈதர்கள் எனப்படும் கரைப்பான்களின் வகைப்பாட்டில் உள்ளது. புரோட்டானேற்றம் செய்யப்பட்ட ஆக்சிரேனின் மீது மெத்தனாலின் கருக்கவர் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்த புரோட்டான் பரிமாற்றத்தின் மூலம் இச்சேர்மம் தயாரிக்கப்படலாம்.
C 2H 5O+ + CH 3OH → C 3H 8O 2 + H+
2-மீதாக்சிஎத்தனால், வார்னீஷ்கள், சாயங்கள், பிசின்கள் ஆகியவற்றைக் கரைக்கும் கரைப்பானாகப் பயன்படுகிறது. இச்சேர்மம் வானூர்தியில் பனிநீக்கும் கரைசலை உருவாக்கும் சேர்க்கைப் பொருளாகவும் பயன்படுகிறது. கரிம உலோக வேதியியலில் இது பொதுவாக வாஸ்காவின் அணைவுச் சேர்மத்தினையும் மற்றும் அதனையொத்த சேர்மங்களையும் (கார்போனைல்குளோரோஐதரிடோட்ரிஸ்(முப்பினைல்பாசுபீன்) ருத்தீனியம் (II)) தொகுப்பதற்குப் பயன்படுகிறது. இந்த வினைகளின் போது ஆல்ககாலானது ஐதரைடு மற்றும் கார்பனோராக்சைடு இவற்றின் மூலங்களாக செயல்படுகிறது.
2-மீதாக்சிஎத்தனால் எலும்பு மஜ்ஜைகள் மற்றும் விந்தகங்களுக்கு நச்சுத்தன்மை உடையதாக உள்ளது. இந்தச் சேர்மத்தைக் கையாளும் தொழிலாளர்களுக்கு புள்ளிச்செல்லிறக்கம், பெருஞ்செல் சோகை, விந்தணுக்குறைவு மற்றும் விந்தின்மை போன்ற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகமாக உள்ளது.[3]
மீதாக்சிஎத்தனால் ஆல்ககால் ஐதரசன் நீக்கும் நொதியின் மூலமாக மீதாக்சிஅசெட்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இந்த மீதாக்சி அசிட்டிக் அமிலமானது பல தீய விளைவுகளைத் தரவல்லது. எத்தனால் மற்றும் அசிட்டேட்டு ஆகிய இரண்டு சேர்மங்களுமே தடுக்கும் விளைவைப் பெற்றுள்ளன. மீதாக்சிஅசிடேட்டானது சிட்ரிக் அமில சுழற்சியில் நுழைந்து மீதாக்சி சிட்ரிக் அமிலமாக மாறுகிறது[4]