2001 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு (2001 Census of India) 1871 முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பின் இது 14வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.[1]
2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்திய மக்கள்தொகை 102,87,37,436 (நூற்றியிரண்டு கோடியே 87 இலட்சத்து முப்பத்தி ஏழாயிரத்தி நானூற்றி முப்பத்தி ஆறு) ஆகும். இதில் ஆண்கள் 53,22,23,090 ஆகவும், பெண்கள் 49,65,14,346 ஆகவும் இருந்தனர்.[2] 1991 - 2001 இடையே பத்தாண்டுகளில் மொத்த மக்கள்தொகை வளர்ச்சி 18,23,10,397 (21.5%) ஆக உயர்ந்துள்ளது.[3]
சமயவாரியாக மக்கள்தொகை
2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இந்துக்கள் 82.75 கோடியாகவும் (80.45%) மற்றும் இசுலாமியர்கள் 13.8 கோடியாகவும் (13.4%) இருந்தனர்.[4][5] மேலும் இந்தியாவில் 108 சமயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.[6] 70 இலட்சம் மக்கள் சமயம் அற்றவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.[7]
வட இந்தியாவில் பெரும்பான்மையாக இந்தி மொழி பரவலாக பயிலப்பட்டது. இந்திய மக்கள்தொகையில் 53.6% இந்தி மொழி அறிந்திருந்தனர். 41% வட இந்திய மக்கள் இந்தி மொழியை தாய் மொழியாகக் கொண்டிருந்தனர்.[8][9][10] 12.5% மக்கள் ஆங்கில மொழி அறிவு கொண்டிருந்தனர்.[11] 25.50 கோடி மக்கள் (24.8%) இரண்டு மொழிகளை பேசுபவர்களாக இருந்தனர்.[12] இந்தியவில் 780 மொழிகளை தாய்மொழியாக மக்கள் பேசினர். இது உலக அரங்கில் பப்புவா நியூ கினியாவுக்கு (839) அடுத்து இரண்டாமிடம் ஆகும்.[13]
முதல், இரண்டு மற்றும் மூன்றாம் மொழிகள் பேசுபவர்கள்
↑Vijayanunni, M. (26–29 August 1998). "Planning for the 2001 Census of India based on the 1991 Census"(PDF). 18th Population Census Conference. Honolulu, Hawaii, USA: Association of National Census and Statistics Directors of America, Asia, and the Pacific. Archived from the original(PDF) on 19 November 2008. Retrieved 17 December 2014.