2002 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு
2002 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (2002 United Nations Climate Change Conference) இந்தியாவின் புது தில்லியில் 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 முதல் நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டின் 8ஆவது மாநாடு இடம்பெற்றது. வளர்ந்த நாடுகள் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கும் வளரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்த தில்லி அமைச்சர்கள் கோரிக்கையை இந்த மாநாடு ஏற்றுக்கொண்டது.[1] மாநாட்டின் பிரிவு 6 [2]இல் இருந்த புது தில்லி பணித் திட்டத்திற்கும் மாநாடு ஒப்புதல் அளித்தது.[3][4][5][6] கட்டமைப்பு மாநாட்டின் 8ஆவது மாநாட்டில் உருசியா சிந்திக்க கூடுதல் நேரம் தேவை என்று கூறி தயாக்கம் காட்டியது. கியோட்டோ நெறிமுறை 55 நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டவுடன் நடைமுறைக்கு வரலாம், இதில் வளர்ந்த நாடுகளின் 1990ஆம் ஆண்டு கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 55 சதவீதத்திற்கு காரணமான நாடுகள் அடங்கும். அமெரிக்காவும் (உலக கார்பன் டை ஆக்சைடில் 36.1% பங்கு) ஆத்திரேலியாவும் ஒப்புதல் அளிக்க மறுத்ததால், உருசியாவின் ஒப்பந்தம் (1990 இல் உலகளாவிய உமிழ்வுகளில் 17%) ஒப்புதல் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது, எனவே உருசியா இந்த செயல்முறையை தாமதப்படுத்த நினைத்தது.[7][8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia