2005 திசம்பர் சென்னை நெரிசல்2005 திசம்பர் சென்னை நெரிசல் (2005 December Chennai stampede) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு பகுதியான எம். ஜி. ஆர் நகரில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட ஒரு நெரிசலாகும். வெள்ளத்தால் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அளித்த நிவாரண உதவியைப் பெறக் கூடிய கூட்டத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது. இந்த நேர்ச்சியில் 42 பேர் இறந்து, 37 பேர் காயமுற்றனர். இந்த நிகழ்வு குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. இராமன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசால் ரூபாய் ஒரு இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 15000 இழப்பீடாக அறிவிக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பெரு மழை பெய்தது. மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் பலர் வீடுகளை இழந்தனர். நகரில் அமைக்கப்பட்ட பல்வேறு மையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான அடையாளச் சீட்டுகள் (டோக்கன்) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பின்னணி2005 ஆம் ஆண்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கடுமையான மழை பெய்தது. இதன் விளைவாக சென்னையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநிலத்தின் கடலோரப் பகுதிகள் பலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.[1] இந்த மழை வெள்ளத்தால் நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் பலர் வீடுகளை இழந்தனர். நகரில் அமைக்கப்பட்ட பல்வேறு மையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான அடையாளச் சீட்டுகள் (டோக்கன்) வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அடையாளச் சீட்டு பெற்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க மையங்களில் ரூபாய் 2,000 மற்றும 10 கிலோ அரிசி, வேட்டி மற்றும் புடவை வழங்கப்பட்டன.[2] இந்த நிவாரண உதவிகள் முதலில் அந்தப் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் இருந்து விநியோகிக்கப்பட்டது, ஆனால் அந்த வீதி குறுகியதாக இருந்ததால், விநியோகமானது அறிஞர் அண்ணா அரசாங்கப் பள்ளிக்கு மாற்றப்பட்டது. 2005 திசம்பர் 17 சனிக்கிழமை அன்று விபத்துக்கு முன்னதாக, 3,452 குடும்பங்களுக்கு அடையாளச் சீட்டுகள் வழங்கப்பட்டன. மேலும் ஞாயிறன்று 4,5000 குடும்பங்களுக்கு விநியோகிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த உதவி அறிவிப்புகளானது பகுதிவாரியாக அறிவிக்கப்பட்டிருந்தது.[3] நேர்ச்சி2005 திசம்பர் 18, ஞாயிற்றுக்கிழமையன்று, சுமார் 4,500 பேர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப்பள்ளிக்குச் சென்றிருந்தனர். அங்கு மூன்று நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்தவர்களுக்கு நிவாரண உதவிக்கான அடையாளச் சீட்டுகள் வழங்கப்பட்டன.[4] காலை 9 மணிக்கு வழங்கப்படவுள்ள அடையாளச் சீட்டுக்காக மக்கள் அதிகாலை 3 மணிக்கே கூடினர். அதிகாலை 3:45 மணியளவில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டது, அதேவேளையில் முதலில் வரும் 1,000 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண உதவி அளிக்கப்படும் என்ற வதந்தி பரவியது. இதையடுத்து காலை சுமார் 4 மணியளவில், கட்டிடத்திற்குள் நுழைவதற்கு காவல்துறையினரால் அமைக்கப்பட்ட தடுப்புகளை மக்கள் உடைத்துக்கொண்டு நுழைந்தனர். நுழைவாயிலில் கான்கிரீட்டால் ஒரு சாய்வுதளம் இருந்தது, இதனால் வரிசையின் நெரிசலில் முன் பகுதியில் இருந்த மக்கள் விழுந்தனர் இவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அவர்கள்மீது தடுமாறி விழுந்தனர். இதனால் ஏற்பட்ட நேர்ச்சியில் 42 பேர் இறந்து, 37 பேர் காயமுற்றனர்.[1][4] திடீரென்று நெரிசலில் மக்கள் விழுந்ததால் அப் பகுதியில் குழப்பம் ஏற்பட்டது. அந்தப் பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிறிய எண்ணிக்கையிலேயே காவலர்கள் இருந்தனர். [2] அன்று துவக்கத்திலேயே கூட்டத்தைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தி இருந்தால் இந்த நிகழ்வை தடுத்திருக்கலாம் என்று அங்கிருந்தவர்கள் கூறினர்.[3][4] பின்விளைவுகுறைந்த வெளிச்சம் மற்றும் மழை காரணமாக, மீட்புப் பணியாளர்கள் அந்த இடத்தை அடைய சிரமத்துக்கு ஆளாயினர். நேர்ச்சி ஏற்பட்ட இடத்தில் குடைகள், காலணிகள், குடும்ப அட்டைகள் போன்றவை எல்லா இடங்களிலும் சிதறிக்கிடந்தன. [4] காயமடைந்தவர்களில் பதினாறு பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் ஆறு பெண்கள் உட்பட பதினோருபேர் இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.[5] காயமுற்றவர்களை மருத்துவமனையில் காணவந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, "நிவாரண உதவி விநியோகமானது காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் முன்கூட்டியே வர வேண்டிய அவசியமில்லை, நாங்கள் நிவாரண உதவிபெறுபவர்களுக்கு 500 பேருக்கு ஒரு சேவை முகப்பு என்ற கணக்கில் ஒன்பது சேவை முகப்புகளுடன் தகுந்த வசதிகளைச் செய்துள்ளோம், எனவே அனைவருக்கும் நிவாரணம் கிடைக்கும் " என்று கூறினார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்குவதாகவும் மாநில அரசு அறிவித்தது. [1] திமுக தலைவர் மு. கருணாநிதி, வரவிருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு நிவாரணப் பணத்தை பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படாதவர்கள் என பார்க்காமல் கட்டுப்படு இன்றி வழங்குவதானது வாக்குகளை கவர்வதற்கே என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறுகையில் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகத்தின் விளைவு இந்த சோக நிகழ்வு என்றும் கூறினார்.[2] நேர்ச்சியில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, அன்று அந்தப் பகுதியிலுள்ள கடைகள் மாலை 2 மணிவரை மூடப்பட்டன.[6]
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia