2005 நவம்பர் சென்னை நெரிசல்2015 நவம்பர் சென்னை நெரிசல் (2005 November Chennai stampede) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் ஒரு பகுதியான வியாசர்பாடியில் உள்ள ஒரு பள்ளியில் 2005 நவம்பர் 6 ஆம் தேதி ஏற்பட்ட ஒரு நெரிசலாகும். சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு அளித்த நிவாரண உதவியைப் பெறக் கூடிய கூட்டத்தில் இந்த நெரிசல் ஏற்பட்டது. இந்த நேர்ச்சியில் 6 பேர் இறந்தனர் மற்றும் 12 பேர் காயமுற்றனர். நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசால் ரூபாய் 1,00,000 மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 15,000 இழப்பீடாக அறிவிக்கப்பட்டது. பின்னணி2005 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பெரு மழை பெய்தது. மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் பலர் வீடுகளை இழந்தனர். நகரில் அமைக்கப்பட்ட பல்வேறு மையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவதற்கான அடையாளச் சீட்டுகள் (டோக்கன்) வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்டது.[1] நேர்ச்சி2005 நவம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை வியாசர்பாடியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட பள்ளியைச் சுற்றி சுமார் 10,000 பேர் திரண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்க மையங்களில் ரூபாய் 2,000 மற்றும 10 கிலோ அரிசி, வேட்டி மற்றும் புடவை வழங்கப்பட்டன. இவற்றை பெறுவதற்காக காலை 9 மணிக்கு வழங்கப்படவுள்ள நிவாரண உதவியைப் பெறுவதற்காக மக்கள் அதிகாலை 4.30 மணிக்கே கூடினர். வாயில்கள் திறக்கப்பட்டதும், மக்கள் முண்டியடித்து திமுதிமுவென கூட்டமாக உள்ளே நுழைய அதனால் ஏற்பட்ட நெரிசலில் நசுங்கி 6 பேர் இறந்ததாகவும், 12 பேர் காயமுற்றதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன.[2] சிலர் 30 பேர் பாதிக்கப்பட்டதாக கூறினர்.[3] பின்விளைவுகள்காயமடைந்தவர்களை மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா சந்தித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு 1,00,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு 15,000 ரூபாய் வழங்குவதாகவும் மாநில அரசு அறிவித்தது.[4] நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதில் பாடம் கற்கத் தவறிய காரணத்தால் மீண்டும் 2005 திசம்பரில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் இறந்தனர் மற்றும் 37 பேர் காயமுற்றனர். குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia