2008 கர்நாடகா தமிழ்நாடு கள்ளச் சாராய சாவுகள்2008 கர்நாடக தமிழ்நாடு கள்ளச் சாராய சாவுகள் சம்பவம் என்பது 2008 மே மாதத்தில் கள்ளச்சாராயம் குடித்து 180 பேர் இறந்த நிகழ்வைக் குறிக்கிறது. இது 2000 மாவது ஆண்டிற்கு பின் நிகழ்ந்த மிகப்பெரிய சோக நிகழ்வு ஆகும். இது கர்நாடக-தமிழ்நாடு கள்ளச்சாராய சாவுகள் சம்பவம் என்று அழைக்கப்படுகிறது.[1][2] இந்த நிகழ்வானது 2000 ஆம் ஆண்டுக்குப் பின் நாட்டில் நடந்த முதல் மோசமான துயரமாக கருதப்படுகிறது.[3][4] நிகழ்வு2008 மே 18 அன்று, கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகர்ப்புற, பெங்களூர் ஊரக, கோலார் மாவட்டம், மற்றும் அண்டையில் உள்ள தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிலர், கற்பூரம் மற்றும் புகையிலை கொண்டு தயாரிக்கப்பட்ட கள்ளச் சாராயத்தை குடித்தனர். இந்த பானம் நச்சுத்தன்மையுள்ள மெத்தில் ஆல்கஹால் [5] ஆகும், இதில் துவக்கத்தில் 156 பேர் மரணமுற்றனர். இவர்களில் 27 பேர் பெங்களூர் உரக மாவட்டத்திலும், 56 பேர் பெங்களூர் நகர மாவட்டத்திலும், 32 பேரும் கோலார் மாவட்டத்திலும், 41 பேர் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இறந்தவர்களாவர். [2] வயிற்று வலியும், வாந்தியும் ஏற்பட்டு பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய எண்ணிக்கையிலானவர்கள் தங்கள் பார்வையை இழந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களிலும் இறந்ததால் இறப்பு எண்ணிக்கை பின்னர் 180 ஆக உயர்ந்தது. [6] அயல்நாட்டு மதுபானத்தைவிட கள்ளச்சாராயம் மலிவாக இருப்பதால் இந்திய ஏழை மக்கள் இதை விரும்பிக் குடிப்பதே, இது சம்பவத்திற்கு முக்கிய காரணம் ஆகும். [7][8] பின்விளைவுவிசச் சாராயத்தை காய்ச்சியதற்காகவும், விற்றதற்காகவும் 52 பேரை காவல் துறை கைது செய்தது. [9] இந்த சோக நிகழ்வுக்குப் பிறகு, கர்நாடக மற்றும் தமிழக அரசாங்கங்கள், கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கினர். [10] கர்நாடகத்தில், எதிர்க்கட்சிகள் இந்த சோகத்திற்காக ஆளும் கூட்டணியை குற்றம்சாட்டியதுடன், இந்த சம்பவத்திற்கான காரணமான சாராயத்துக்கு தடைவிதிக்கவேண்டுமென்றதால் தடைவிதிக்கப்பட்டது. [11] தமிழ்நாட்டில், சில அரசியல் கட்சிகள் மாநிலத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்று கோரின. [12] இந்த சம்பவத்திற்காக தமிழக அரசு 21 போலீஸ்காரர்களை இடை நீக்கம் செய்தது. [13] பெங்களூர் காவல் துறையினர் கள்ளச்சாராய வலைப்பின்னலில் ஒரு முக்கிய பிரமுகரை கைது செய்து, ஆனால் பிரதான விநியோகர் தற்கொலை செய்து கொண்டார். [13] பெங்களூரு போலீசார் கள்ளச்சாராய வலையமைப்பின் தலைவனை கைது செய்தனர், ஆனால் முதன்மை விநியோகஸ்தர் தற்கொலை செய்து கொண்டார்.[14] குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia