இரிடியம் 33 (Iridium 33) மற்றும் காச்மாசு-2251 ( Kosmos-2251) ஆகிய செயற்கைக்கோள்கள் மோதிக் கொண்டன[3][4][5]. இவை இரண்டும் 42,120 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.[6][7]
இதில் இரிடியம் செயற்கைக் கோள் இரிடியம் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்குச் சொந்தமானது. காச்மாசு 2251 ருசியாவிற்குச் சொந்தமானது.
விளைவுகள்
இம்மோதலில் இரண்டு செயற்கைக் கோள்களும் சேதமடைந்தன. இதில் காச்மாசு--2251 செயற்கைக் கோளானது ரஷ்யாவால் கைவிடப்பட்ட செயலிழந்த செயற்கைக் கோள் ஆகும். இரிடியம் 33 செயற்கைக் கோள் பயன்பாட்டில் இருந்தது. காச்மாசு--2251 செயற்கைக் கோள் 1995 லிருந்து பயன்பாட்டில் இல்லை. அமெரிக்காவின்நாசா நிறுவனம் இம்மோதலினால் 10 சென்றிமீட்டர்களுக்கும் அதிகமான 1,000 பொருள்கள் விண்வெளிக் கழிவுகளாக மாறின எனத் தெரிவித்துள்ளது.[8] சூலை 2011 ல் அமெரிக்க விண்வெளிக் கண்காணிப்பு அமைப்பு 2,000 விண்வெளிக் கழிவுகள் என வகைப்படுத்தியுள்ளது.[9]
செயற்கைக் கோள்கள்
மாதிரி இரிடியம் செயற்கைக் கோள்.
கச்மாசு-2251 செயற்கைக் கோள் 1993 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தியதி ஏவப்பட்டது. இரண்டு வருடங்களில் 1995 ன் பிறபகுதியில் கைவிடப்பட்டது.இது 950 கிலோகிராம் எடையுடையது. இது ராணுவப் பயன்பாட்டிற்கானது.[10][4]
இரிடியம் 33 செயற்கைக் கோள் 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் தியதி ஏவப்பட்டது. விபத்தின் போது இது பயன்பாட்டில் இருந்தது. இதன் எடை 560 கிலோகிராம்கள் ஆகும். இது தொலைத்தொடர்பு பயன்பாட்டிற்கானது.[4]
↑McDowell, Jonathan (February 15, 2009). "Jonathan's Space Report No. 606". Archived from the original on 2017-04-05. Retrieved 2009-02-17. Strela-2M satellites had lifetimes of around 3 years, and Gen. Yakushin of the Military Space Forces was quoted in Moscow Times as saying Kosmos-2251 went out of service in 1995.
↑Matthews, Mark K. (2009-02-13). "Crash imperils satellites that monitor Earth". Orlando Sentinel. Archived from the original on 2009-02-16. Retrieved 2009-02-17. (reporting it as "what amounted to a 26,000 mph [(7.7 miles/sec)] collision").