2009 பதுஅ உலககிண்ண தகுநிலைப் போட்டிகள்
2009 பதுஅ உலகக்கிண்ண தகுநிலைப் போட்டிகள் ஏப்ரல் 2009ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற ஓர் துடுப்பாட்டப் போட்டியாகும். இது 2011 உலகக்கிண்ணத்திற்கான இறுதி தகுநிலைப் போட்டியாகும். முன்பு பதுஅ கோப்பை என அறியப்பட்ட போட்டிகளின் மறுபதிப்பான இப்போட்டிகள் 2007-09 உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் இறுதிப் போட்டிகளாகும். அணிகள்முந்தைய உலகக்கிண்ண ஆட்டத்தின் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் பங்குகொள்ள தகுதிபெற்றவையும் மற்றும் உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகளின் முதல் கோட்டத்தில் இருப்பவையுமான கீழ்வரும் நாடுகள் நேரடியாகத் தகுதி பெற்றன.
இந்தப் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த அணிகள் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர். முதல் ஆறு இடங்களில் உள்ள அணிகள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆடும் தகுதியை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குப் பெறுகின்றனர் அல்லது அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றனர்; மேலும் இந்த ஆறு அணிகள் பதுஅ பெருநிலப்பகுதி கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கும் தகுதி பெறுகின்றனர். கடைசி இரண்டு அணிகள் 2011 பதுஅ உலக துடுப்பாட்ட சங்கப்போட்டிகள் கோட்டம் மூன்றிற்கு கீழிறக்கப்படுகின்றன. இப்போட்டிகளின் இறுதி ஆட்டமும் மூன்றாவது, ஐந்தாவது இடத்திற்கான ஆட்டங்களும் அலுவல்முறை ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்டங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. முடிவுகள்அயர்லாந்து 2011 உலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கெடுக்க தகுநிலை பெற்றது. இறுதிப்போட்டியில் கனடாவை. வென்றது.[1] அவர்களுடன் கனடா, நெதர்லாந்து மற்றும் கென்யா அணிகள் தகுதி பெற்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் இசுகாட்லாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன; அத்துடன் ஐந்தாவது இடத்திற்கு அவர்களிடையே நடந்த ஆட்டத்தில் [2] ஆப்கானிஸ்தான் வென்றது. இதன் மூலம் ஒரே ஆண்டில் உலக கோட்டம் ஐந்திலிருந்து ஒருநாள் பன்னாட்டத் துடுப்பாட்டம் ஆடும் தகுநிலை வரை முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்தது. இறுதி நிலவரம்
இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia