2009 மங்களூர் குடிமனைத் தாக்குதல்24 ஜனவரி 2009 அன்று, ஸ்ரீ ராம் சேனா இந்தியாவின் மங்களூருவில் உள்ள ஒரு மதுக்கடையில் இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் குழு மீது தாக்குதல் நடத்தியது.[1][2][3] ஸ்ரீ ராம சேனா அமைப்பின் 40 ஆர்வலர்கள் குழு மதுக்கடையில் நுழைந்தது "அம்னீசியா - ஓய்வறையில்" நுழைந்து பாரம்பரிய இந்திய விழுமியங்களை மீறுவதாகக் கூறி, இளம் பெண்கள் மற்றும் ஆண்களின் ஒரு குழுவைத் தாக்கினர். இரண்டு பெண்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் நிகழ்படம் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட துணுக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது, இருப்பினும் 'அறிவிக்கப்படாத' இந்த தாக்குதலைப் படம் எடுத்த தொலைக்காட்சி குழுவினர் எவ்வாறு தயாராக இதற்குத் தயாராக இருந்தார்கள் என்பது தெரியவில்லை.[4][5] மங்களூரில் பரபரப்பாக இயங்கக்கூடிய பால்மாட்டா பகுதியில் உள்ள வுட்ஸைடில் உணவகத்தில் உள்ள அம்னீசியா மதுக்கடையில் உள்ள ஊழியர்களின் அறிக்கையின்படி, சனிக்கிழமை மாலை 4:30 மணிக்கு உண்மையான தாக்குதல் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு ஆண்கள் உணவகத்தின் வரவேற்பறையினை அணுகியதாகக் கூறப்படுகிறது. மேலும் அப்போது அவர்கள் வளாகத்தை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. .[6] "இதைச் செய்தவர் யாராக இருந்தாலும் அவர்கள் ஒரு நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள். பெண்கள் மதுக்கடைகளுக்கு செல்வதை ஏற்க முடியாது. எனவே, சேனா உறுப்பினர்கள் என்ன செய்தாலும் அது சரிதான். மாநிலத்தில் உள்ள பிஜேபி அரசாங்கத்தை கேவலப்படுத்த இந்த சிறிய சம்பவத்தை நீங்கள் முன்னிலைப்படுத்துகிறீர்கள் "என்று நிறுவனர் பிரமோத் முத்தாலிக் கூறினார்.[5] 2018 ஆம் ஆண்டில், முத்தாலிக் மற்றும் 24 பேர் மதுக்கடை தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.[7] பொதுமக்களது எதிர்வினைபழமைவாத மற்றும் வலதுசாரி செயல்பாட்டின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிங்க் சத்தி பிரச்சாரம், எனும் வன்முறையற்ற எதிர்ப்பு இயக்கம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. குறிப்பாக பிரமோத் முத்தாலிக்கின் அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டமாக இந்த பிரச்சாரம் உருவாக்கப்பட்டது. எதிர்வினைகள்ஸ்ரீ ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் பின்னர், மங்களூரு மதுக்கடை மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரினார். மேலும், வலதுசாரி குழு செயல்பட்ட விதம் "தவறு" என்று கூறினார், ஆனால் அது "எங்கள் தாய்மார்களையும் மகள்களையும் காப்பாற்றுவதற்காக" நடைபெற்றது என்றும் வலியுறுத்தினார். பின்னர் அவர் கர்நாடக காவல்துறையினரால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 ன் கீழ் கைது செய்யப்பட்டார்.[8][9][10][11][12] ஜனதா தள (மதச்சார்பற்ற) தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான எச்டி தேவகவுடா 26 ஜனவரி 2009 அன்று கர்நாடக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா கர்நாடக மாக்களை தலிபானியாக்கியதற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்[13] மங்களூரு மேயர், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி, மங்களூரின் தலிபானிசேசன் பற்றிய குறிப்பிற்காக முதல் தகவல் அறிக்கையினை பதிவு செய்தார்.[14] தேசிய மகளிர் ஆணைய சர்ச்சைமதுக்கடையில் பெண்கள் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க தேசிய பெண்கள் ஆணையம் (NCW) மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்தது.[8] மூன்று பேர் கொண்ட தேசிய ஆணைய மகளிர் ஆணைய குழுவைச் சேர்ந்த நிர்மலா வெங்கடேஷ், 40 பேர் கொண்ட கும்பலுக்கு எதிராக பாதுகாக்க போதுமான பாதுகாப்பு இல்லை என்று கூறி இந்த தாக்குதலுக்கு மதுக்கடை மீது குற்றம் சாட்டினார். ஒரு இசைக்குழுவின் நேரடி இசை நிகழ்ச்சியின் போது பல பெண்கள் நடனம் ஆடியதும் இதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.சமூக ஊடகங்கள் கர்நாடகாவின் புகழுக்கு களங்கம் விளைவித்தது தான் தனது கவலை என்று கூறினார். தனக்கு கிடைத்த தகவல்களின்படி, பல பெண்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.[15][16] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia