2011 எம்டி
2011 எம்டி (2011 MD) என்பது பூமிக்குக் கிட்டவாக, கிட்டத்தட்ட 12,000 கிலோமீட்டர் (7,500 மைல்) தூரத்தில், கடந்து சென்ற ஒரு சிறுகோள் ஆகும். இவை அப்பல்லோ சிறுகோள் வகையைச் சேர்ந்ததாகும். இது 2011 ஆம் ஆண்டு சூன் 27 ஆம் நாள் 17:00 UTC நேரத்துக்கு பூமிக்குக் கிட்டவாக வந்துள்ளது[1][2][3][4]. இவ்விண்கல் பூமியை அணுகும் போது அது சூரியனுக்குக் கிட்டவாக இருப்பதாகவே காணப்பட்டது. இதனால் இதனை சிறிது நேரம் மட்டுமே அவதானிக்க முடிந்தது. ஆனாலும், ஆஸ்திரேலியா, தெற்கு ஆப்பிரிக்கா, மற்றும் அமெரிக்காவில் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் இதனை அவதானிக்க முடிந்துள்ளது[3] நியூ மெக்சிக்கோ, சொக்கோரோ என்ற இடத்தில் உள்ள விண்தொலைநோக்கி மூலம் 2011 சூன் 21 ஆம் நாளில் "லிங்கன் பூமியை அணுகும் சிறுகோள்கள் ஆய்வு" (லீனியர்) என்ற நாசா ஆய்வுக்கழகத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கண்டுபிடிக்கப்பட்டபோது இதனை ஒரு விண்கழிவு என்றே வானியலாளர்கள் கருதிருந்தனர். ஆனாலும் பின்னர் இது ஒரு சிறுகோள் என உறுதி செய்யப்பட்டது[3]. இது ஏறத்தாழ 10 முதல் 45 மீட்டர்கள் (30 முதல் 150 அடி) நீளமானதெனக் கணிக்கப்பட்டுள்ளது[5] 2011 எம்டி பூமியை நோக்கி வந்திருந்தாலும், அது வளிமண்டலத்திலேயே முழுமையாக எரிந்திருக்கும் எனவும், பூமியில் எதுவித சேதத்தையும் ஏற்படுத்தியிருக்காது எனவும் நாசா தெரிவித்துள்ளது[5]. 2011 எம்டியின் பாதை
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia