2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு சூலை 30, 31 ஆகிய இருநாட்களும்
இந்திய மாநிலங்கள் கரும் சிவப்பிலும் சூலை 31யில் பாதிக்கப்பட்டவை
வெளிர்சிவப்பிலும் காட்டப்பட்டுள்ளன.
நாள் 02:48, 30 சூலை 2012 (+05:30) (2012-07-30T02:48:00+05:30 ) - 20:30, 31 சூலை 2012 (+05:30) (2012-07-31T20:30+05:30 ) நிகழிடம் வட இந்தியா
2012 இல் இந்தியாவின் மிகப்பெரும் மின்வெட்டு என்பது சூலை 30, 2012 அன்று வட இந்தியாவில் 14 இந்திய மாநிலங்களில் நிலவிய திடீர் மின்வெட்டும் [ 1] மறுநாள் சூலை 31இல் 21 மாநிலங்களைப் பாதித்த மின்வெட்டையும் குறிக்கின்றது. இதுவே உலகளவில்[ 2] மிகப்பெரும் இருட்டடிப்பாக 600 மில்லியன் (60 கோடி) மக்களை [ 3] [ 4] [ 5] அதாவது இந்தியாவின் பாதி மக்கள்தொகையை பாதித்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. சூலை 31 மாலை நிலவரப்படி வட இந்தியாவின் பெரும்பான்மையான இடங்களுக்கும் தலைநகர் தில்லிக்கும் பாதிக்கும் மேற்பட்ட கிழக்கு இந்திய மாநிலங்களுக்கும் சரிசெய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படுகிறது.[ 6]
பின்னணி
இந்த மின்தடங்கலுக்கு முந்தைய வாரங்களில் புது தில்லியில் நிலவிய மிகுந்த வெப்பநிலையால் மின்தேவை எட்டியிராத அளவுகளுக்கு உயர்ந்திருந்தது. இந்தியாவில் பருவமழை வரத்தவறியதால் பஞ்சாப் , அரியானா மாநிலங்களில் விவசாயத்திற்கான பாசன நீரேற்றிகளுக்காக கூடுதலான மின்சாரத்தை மின்வலையிலிருந்து (power grid) நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கதிகமாக உறிஞ்சிக் கொண்டன.[ 7] பருவமழை தாமதத்தால் நீர் மின்நிலையங்களின் உற்பத்தியும் குறைந்திருந்தது.[ 8]
பொதுவாகவே[ 9] , இந்திய மின் கட்டமைப்பு பொருளாதார வளர்ச்சி வீதத்தை 1.2 % பாதிக்குமளவு பின்தங்கி வருகிறது.[ 9]
மேற்கோள்கள்
↑ "Power crisis now trips 22 states, 600 million people hit" . Deccan Herald . 31 July 2012. Retrieved 31 July 2012 .
↑ "Power cut hits millions, among world's worst outages" . ராய்ட்டர்ஸ் . 1 ஆகத்து 2012. Archived from the original on 2015-10-10. Retrieved 1 ஆகத்து 2012 . "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2015-10-10. Retrieved 2012-08-01 .
↑ "India blackouts leave 700 million without power" . The Guardian, UK. 31 July 2012. Retrieved 31 July 2012 .
↑ "620 million without power in India after 3 power grids fail" . USA Today. 31 July 2012. Archived from the original on 5 மார்ச்சு 2016. Retrieved 31 July 2012 .
↑ "India's Mass Power Failure Worst Ever in World History" . Outlook. Archived from the original on 1 ஆகத்து 2012. Retrieved 1 August 2012 .
↑ "Power grids fail: Power restoration complete in Delhi & northeast, 50% in eastern region" . The Economic Times . 31 July 2012. Retrieved 31 July 2012 .
↑ "Power grid failure: FAQs" . Hindustan Times . 31 July 2012. Archived from the original on 16 அக்டோபர் 2013. Retrieved 31 July 2012 . "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2013-10-16. Retrieved 2012-08-01 .
↑ "Power grid failure makes 370M swelter in dark as India struggles to meet its vast energy needs" . The Washington Post . Associated Press. 30 July 2012 இம் மூலத்தில் இருந்து 22 பிப்ரவரி 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190222210002/https://www.washingtonpost.com/business/power-grid-failure-makes-370m-swelter-in-dark-as-india-struggles-to-meet-its-vast-energy-needs/2012/07/30/gJQAY4afKX_story.html . பார்த்த நாள்: 31 July 2012 . "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2019-02-22. Retrieved 2021-08-13 .
↑ 9.0 9.1 http://www.bloomberg.com/news/2012-08-01/worst-india-outage-highlights-60-years-of-missed-targets-energy.html
வெளி இணைப்புகள்