சலாபிக்கள், காற்பந்தாட்ட ஆர்வலர்கள் (எகிப்து)[9] ஆயுததாரிகள், அல் காயிதா தொடர் இருக்கக்கூடியவர்கள் (லிபியா)[10] முசுலிம் எதிர்ப்பாளர்கள் (இந்தியா)[8]
செப்டம்பர் 11, 2012 அன்று எகிப்தின் கெய்ரோவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகம், லிபியாவின்பங்காசியில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க துணைத் தூதரகம் என்பன இனசன்சு ஒவ் முசுலிம்சு என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் யூடியூபில் வெளியானதைத் தொடர்ந்து, பல முசுலிம்களால் அத்திரைப்படம் தெய்வ நிந்தை எனக் கருதப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகின. பங்காசியில் எறிகணையினால் உந்தப்படும் எறிகுண்டு மற்றும் சிறு ஆயுதங்களினால் துணைத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. இதில் லிபியாவுக்கான வருகைதரும் அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்டோபர், ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சேவை தகவல் முகாமை அலுவலர் சீன் ஸ்மித்[11] அமெரிக்க தனியார் பாதுகாப்பு பணியாளர் கிளென் டொகேர்டி[12] முன்னால் ஐக்கிய அமெரிக்க நேவி சீல் படைவீரர் டிரோன் வூட்ஸ்[13] மற்றும் பத்து லிபிய காவல் துறையினர் கொல்லப்பட்டும்[3] ஏனைய இருவர் காயமடைந்தனர்.
பிந்திய அறிக்கைகளின்படி, பங்காசி தாக்குதல் 'சிக்கல்' மிக்கதும், முறையாக செயற்படுத்தப்பட்டுள்ளது போன்றும் காணப்படுகின்றது.[14] பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அலுவலர்கள் பங்காசி தாக்குதல் ஏற்கெனவே திட்டமிடப்பதும், அது திரைப்படத்தினால் அல்லவென்றும் குறிப்பிட்டனர்.[15] முன்னைய அறிக்கை, அமெரிக்கா தாக்குதல் பற்றி முன்னமே அறிந்திருக்கலாம் என தெரிவித்தது.[16] ஆயினும் இது அமெரிக்க நிர்வாகத்தினால் மறுக்கப்பட்டது.[17] லிபிய அதிகாரிகள் இது திட்டமிட்ட இரு பகுதிகளான, பாதுகாப்பான இல்லத்தையும் உள்ளடக்கிய தாக்குதல் என திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
கெய்ரோவில், ஒரு குழு தூதரக சுவர் மீது ஏறி அமெரிக்காவின் தேசியக் கொடியினைக் கிழித்து, அது இருந்த இடத்தில் கருப்பு இசுலாமியக் கொடியினை ஏற்றினர். எகிப்தில் 200 க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். செப்டம்பர் 30 இல், எதிர்ப்பு யெமனின்சனாவிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்திற்குப் பரவி, நான்கு எதிர்ப்பாளர்கள் இறக்கவும், 35 எதிர்ப்பாளர்களும் பாதுகாப்பு படையினரும் காயமடையக் காரணமாகியது. லிபியாவிலும் யெமனிலும் நடந்த கூட்டு தாக்குதல்களினால் 18 பேர் மரணமாகி, அமெரிக்க தூதரகம் மீதான நான்காவது பாரதூரமான தாக்குதலாக, 1984 பெய்ரூட் குண்டுத் தாக்குதல், 1983 அமெரிக்க தூதரக குண்டுத் தாக்குதல், 1998 அமெரிக்க தூதரக குண்டுத் தாக்குதல் என்பவற்றுக்கு அடுத்ததாக பதிவாகியது.
மேலதிக ஊர்வலங்கள் பன்னாட்டளவில் ஐக்கிய அமெரிக்க தூதரகங்களுக்கு வெளியே இடம் பெற்றன. வெள்ளிக்கிழமை சூடானின்தலைநகரம்கர்த்தூமிலுள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியபோது 3 ஆர்ப்பாட்டக்காரர்கள் இறந்ததாக அந்நாட்டு வானொலி கூறியுள்ளது.[18] ஆர்ப்பாட்டக்காரர்கள் செருமனி மற்றும் ஐக்கிய இராச்சிய தூதரகங்களையும் தாக்கியுள்ளார்கள். துனீசியாவில் தலைநகரத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தை தாக்கி அங்கிருந்த வண்டிகளை கொழுத்தியுள்ளனர். அங்கு இரண்டு பேர் இறந்தனர். அங்குள்ள அமெரிக்க பள்ளியும் கொழுத்தப்பட்டுள்ளது. லெபனான் நகரான திரிபோலியுள்ள அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கெண்டக்கி பிரைடு சிக்கன் என்ற துரித உணவகத்துக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர். வங்காள தேசத்தில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க கொடியை எரித்தும் படத்தை உருவாக்கியவருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கோரி ஊர்வலம் வந்தனர். ஆப்கானித்தான் நகரான ஜலலாபாத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் உருவத்தை தீயிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். பாலஸ்தீனம், இலங்கை, மாலைத்தீவுகள் போன்றவற்றிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமுமுக அமெரிக்க துணைத் தூதரகங்கத்துக்கு எதிரில் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு போன்ற வன்முறை ஏற்பட்டதால் 86 பேர் கைது செய்யப்பட்டனர் [19][20].