2012 மங்களூர் இல்லவிடுதி தாக்குதல்28 சூலை 2012 அன்று, இந்து ஜாக்ரண வேதிகே தொடர்புடைய ஆர்வலர்கள்,[1] கர்நாடகாவின் மங்களூரில் உள்ள [2] இல்லவிடுதியில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் உள்ளவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.[3][4] விருந்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் அடித்தும், ஆடைகளைக் களைந்தும் துன்புறுத்தப்பட்டனர்.[5] அந்தத் தாக்குதலில் சில பெண்களின் முகங்களில் காயங்கள் ஏற்பட்டன. இளைஞர்கள் மது அருந்துவதாகவும் "சில அநாகரீகமான செயல்களில்" ஈடுபட்டதாகவும் அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சங்கப் பரிவாரின் ஆர்வலர்கள் கூறினர். [6] பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர்வாசிகள், பல முறை காவல் துறையில் புகார் அளித்தும், அந்த இல்ல விடுதியில் நடைபெற்ற "சட்டவிரோத செயல்களை" தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகார் கூறினர். [7] சங்கப் பரிவார் தலைவர் ஜெகதீஷ் கரந்த் இது போன்ற "ஆபாச செயல்களை" சோதனை செய்யுமாறு காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்தார். [7] இந்தத் தாக்குதலின் பகுதி அளவு அங்கு இருந்த நிருபர் ஒருவரால் பதிவு செய்யப்பட்டு பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. [8] [9] அடுத்த நாட்களில் 22 ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். [10] அரசாங்கத்தின் பதில்கர்நாடக உள்துறை அமைச்சர் ஆர். அசோக் இந்த தாக்குதலைக் கண்டித்து, காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் இதுபோன்ற சம்பவங்களை பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் கூறினார். [6] காவல் துறைசம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த அரசு காவல்துறை உயர் அதிகாரியான பிபின் கோபாலகிருஷ்ணனை அனுப்பியது. அவரது விரிவான விசாரணையின் அடிப்படையில், கோபாலகிருஷ்ணன் அந்த சிறுவர்களும் சிறுமிகளும் சக ஊழியர்கள் என்பதை தெளிவுபடுத்தினார். விருந்தில் போதைப்பொருள் அல்லது வேறு எந்த சட்டவிரோதப் பொருட்களும் இல்லை என்றும், இளைஞர்கள் குழு இரவு 7:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேற திட்டமிட்டுருந்ததாகவும் அவர் கூறினார். [11] கர்நாடக மாநில மகளிர் ஆணையம்மகளிர் ஆணையம், காவல்துறையினர் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை எனக் கூறினர். ஆனால் மகளிர் ஆணையத்தில் தலைவர் சி.மஞ்சுளா, இது ஒரு கழிக் கொண்டாட்டம் என்று தொடர்ந்து கூறினார். பாதிக்கப்பட்டவர்களை விசாரிக்குமாறு அவர் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டார். மேலும், அவர்கள் மனித கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறினார். [11] பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்ற நிகழ்வுகளுக்கு எதிராக "போலி-பெண்ணியவாதிகள்" குரல் எழுப்பவில்லை என்று மஞ்சுளா குற்றம் சாட்டினார். [12] இல்ல விடுதியில் உள்ளவர்கள் போதைப்பொருட்களை உட்கொள்வதாக அவர் கூறினார், மேலும் இளைஞர்களின் இத்தகைய நடத்தைக்கு "பொறுப்பற்ற" மாவட்ட நிர்வாகம் தான் காரணம் என குற்றம் சாட்டினார். [12] மேலும் அவர், மங்களூரில் உரிமம் பெறாத இல்ல விடுதிக்களை மூட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களின் முன்னோடிகள் குறித்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்தை கேட்டுக் கொண்டார். [13] குழு அறிக்கைஇந்த ஆணையம் 29 ஜூலை அன்று உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. 'பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்த சிறுவர்கள் சிறுமிகளை தவறாக வழிநடத்தியுள்ளார்களா' என்பது குறித்து விசாரணை நடத்த அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. [14] [11] காவல் துறை விசாரணைக்கு நேரடி முரண்பாடாக, தலைவர் மஞ்சுளா, இல்ல விடுதியில் போதை மருந்து உட்கொள்வதாக கூறி, இளைஞர்களின் இத்தகைய நடத்தைக்கு "பொறுப்பற்ற" மாவட்ட நிர்வாகத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். [12] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia