2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்
இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் பெப்ரவரி 21, 2013 அன்று மாலை இந்திய நேரப்படி 19:00 மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தன. கூட்டம் மிகுந்த சுற்றுப்புறப் பகுதியான தில்சுக்நகரில்[6] 100 மீட்டர்களுக்குள்ளேயே இரண்டு குண்டுகளும் வெடித்துள்ளன.[7][8] முதல் குண்டுவெடிப்பு கோனரக் திரையரங்கின் எதிரிலிருந்த ஆனந்த் டிபன் சென்டர் என்ற உணவகத்தின் வெளியே சாலையோரத்தில் வெடித்தது. இரு நிமிடங்கள் கழித்து இரண்டாவது குண்டு வெங்கடாத்திரி திரையரங்கின் அண்மையில் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெடித்துள்ளது.[9][10] முன்னதாக 2012இல் புனேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்களையொட்டி தில்லி சிறப்புக் காவல் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வந்த இந்திய முஜாஹிதீன் என நம்பப்படும் கைதிகள் தாங்கள் ஐதராபாத்தின் கூட்டமானப் பகுதிகளை இந்நோக்கில் ஆய்வு செய்ததாக கூறியுள்ளனர்.[11] வழக்கும் தீர்ப்பும்இந்த வெடிகுண்டு வழக்கு தேசிய புலானாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது இந்த வழக்கில் யாசின் பதக்கல் உள்பட 5 பேர் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது தீர்ப்பு வழங்கியது..இந்த தீர்ப்பை எதிர்த்து யாசின் பத்கல் உள்பட 5 பேரும் தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை தெலங்காணா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன்,. தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என 08 ஏப்ரல் 2025 அன்று தீர்ப்பு வழங்கியது.[12] சான்றுகோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia