2015 சூபா ஏஎன்-12 வானூர்தி விபத்து (2015 Juba An-12 crash),[3]2015-ஆம் ஆண்டு நவம்பர் 4-ம் திகதி தெற்கு சூடான் தலைநகர் சூபாவில் (Juba) வெண் நைல் (White Nile) பகுதியில் ஏற்பட்டது.[4] இந்த விபத்தின்போது 6 விமான சேவைப் பணியாளர்கள், 12 பயணிகள் (அல்லது கூடுதலாக) (வேறுபட்ட மூலங்கள்) இருந்துள்ளனர். நம்பகத்தக்க மூலத்தின்படி 37 பேர்கள் இவ்விபத்தில் பலியாகியுள்ளனர்.[5]மேலும் இந்நிகழ்வில் ஒரு இளம் பயணரும், மற்றும் ஒருவயது பெண் குழந்தையும் உயிருடன் இருந்தது கண்டறியப்பட்டது.[6][7]
விபத்து விவரம்
விபத்துக்குள்ளான இவ்வானூர்தி, தெற்கு சூடான் தலைநகர் சூபா சர்வதேச வானூர்தி தளத்திலிருந்து (Juba International Airport),[8] வடகிழக்கு பிராந்தியத்திலுள்ள எண்ணெய் வயலான பலோய்ச் வானூர்தி தளம் (Paloich Airport)[9] நோக்கிப் புறப்பட்டது. சூபா வானூர்தி தளத்தின் 13-ம் எண் ஓடுபாதையில் மேலேறிய அவ்வானூர்தி, சிறிது நேரத்தில் எதிர்த்திசையிலுள்ள 1100 மீட்டர் (3600 அடி) உயரமுள்ள ஒரு மலையை கடந்து வெள்ளை நைல் நதியின் (White Nile) பகுதியில் விபத்தானதாக மூலத்தில் உள்ளது.
தென் சூடான் அதிகாரிகளின் அறிக்கைப்படி, பெருமளவில் எண்ணெய் வயல் பணியாளர்கள் பயணித்ததால் வானூர்தி பெருஞ்சுமையாக இருந்துள்ளது.[10] தென் சூடான் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், குழுவில் குறைந்தது 18 பேர்கள் இருந்ததாக கூறினார்.[11] ஆரம்பத் தகவல்களின்படி, பலி எண்ணிக்கை பல்வேறாக இருந்தது. ஆனால் தென் சூடானின் போக்குவரத்து அமைச்சர், குஒங் தன்ஹியர் கத்லோக் (Kuong Danhier Gatluak) மொத்தம் 37 பேர்கள் பலியானதாக அறிக்கையில் தெரிவித்தார்.[12] சம்பவத்தின்போது, வானூர்தி சேவைபணியாளர்கள் குழுவில் ஐந்து ஆர்மேனியர்களும், உருசியர் ஒருவரும் உள்ளடக்கியதாக காணப்படுகிறது.[13] முதற்கட்ட தகவல்படி, மூன்று பயணிகள் உயிர் தப்பியதாகவும், அம்மூவரில் ஒருவர், அவருக்கு சம்பந்தமற்ற 13-மாத கைக்குழந்தை ஒன்றை கையிலேந்தியபடி இருந்துள்ளார். பின்பு, மூவரில் ஒருவர் வைத்தியசாலையில் இறந்துள்ளார். அவர், சேவைபணியாளரில் ஒருவரென மூலத்தில் உள்ளது.[14]
வானூர்தி விவரம்
விபத்துக்குள்ளான இவ்வானூர்தி, 1971-ம் ஆண்டு தாஷ்கண்ட் வானூர்தி தயாரிப்பு சங்கம் (Tashkent Aviation Production Association(TAPA) எனும் கூட்டுக் குழுவால் உருவாக்கப்பட்டதாகும். சுருக்கமாக, ஏஎன்-12 வானூர்தி (An-12 aircraft) என்றழைக்கப்படும் இந்த வானூர்தி ஆன்டோனோவ் ஏஎன்-12பிகே (Antonov An-12BK) பெயருடைய இது, ஒரு சரக்கு வானூர்தியாகும். இஒய்-406 (EY-406) எம்எஸ்என் 01347704 ( msn 01347704) (தாஜிகிஸ்தான்), என்ற பதிவுற்ற இச்சரக்கு வானூர்தி, நேச சேவைகள் வரையறை (Allied Services Ltd) எனப்படும் தளவாடங்கள் நிறுவனம், குத்தகை அடிப்படையில் தாஜிகிஸ்தான்ஆசியா எய்ர்வேசு வான் போக்குவரத்து நிறுவனத்தால், தென் சூடான் சூபா வானூர்தி தளத்தில் இயக்கி வந்ததாக மூலத்தின் மூலம் அறியப்பட்டது.[15]