2015 பாக்கித்தான் புயல்![]() . 2015 பாக்கித்தான் புயல் (2015 Pakistan Cyclone) 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இரவு வடமேற்கு பாக்கித்தானை கடுமையாகத் தாக்கியது. பெசாவர், நவ்செரா மற்றும் சார்சாத்தா நகரங்களில் கணிசமான சேதம் ஏற்பட்டது [1]. புயல் காரணமாக கனமழை பொழிவும் மணிக்கு 120 கிமீ (அல்லது ஒரு மணி நேரத்திற்கு 75 மைல்களுக்கு மேல்) வேகத்துடன் கூடிய சூறைக் காற்றுடன் கூடிய மழையும் பெய்தது [2]. புயல் உண்டாக்கிய சேதம் காரணமாக 45 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200 எண்ணிக்கைக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர் [2]. ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட்ட மழைப்பொழிவில் பாக்கித்தானின் சில இடங்களில் ஒரு மீட்டர் (அல்லது மூன்று அடி ஆழம்) வரை வெள்ளத்தில் மூழ்கியிருந்த பகுதியில் மீண்டும் புயல் ஏற்பட்டது [1]. இதனால் பல கட்டிடங்களின் சுவர்கள் மற்றும் கூரைகள் உடைந்தன. பல மின் கம்பங்கள் அடித்துச் செல்லப்பட்டன. கிராமப்புற பெசாவர் மற்றும் சார்சாத்தா பகுதிகளில் இருந்த கால்நடைகள், கோதுமை பயிர்கள் மற்றும் பழத்தோட்டங்கள் முதலியன அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது [1][2]. புயலுக்குப் பிறகு மக்களில் பலர் காயமடைந்த நிலையில் குடிநீர், உணவு, தங்குமிடம் ஆகியவை இல்லாமல் அவதிப்பட்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி முயற்சிகளுக்கு உதவுவதற்காக கைபர் பக்துன்வா அரசு மீட்புக்குழுவை அமைத்து பாதிப்புக்கு உள்ளான பகுதிகளுக்கு அனுப்பியது [1][2][3] பத்திரிகைகளில் இப்புயல் "சிறிய-சூறாவளி" என பெயரிடப்பட்டிருந்தது. செயற்கைக்கோள் படம் (படம் ) மற்றும் வானிலை ஆய்வு தரவுகள் இப்புயல் ஒரு இலேசான சூறாவளி அல்ல ஆனால் வெப்பச்சலனத்தினால் தோன்றிய நடுத்தர அளவு சூறாவளியின் வடிவம் என்று குறிப்பிடுகின்றன. இச்சூறாவளியால் இடி மின்னலுடன் கூடிய டொர்னாடோ அல்லது டெரெக்கோ எனப்படும் அதிவேக சுழல் காற்றை உருவாக்க முடியும் என்று பரிந்துரைத்தன. முன்னதாக ஏற்பட்ட பூகம்பத்தில் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உதவுவதற்காக நேபாளத்திலிருந்து உதவிப்பொருட்களுடன் வரவிருந்த இரண்டு விமானங்களை பாக்கித்தான் இராணுவம் இரத்து செய்ய கட்டாயப்படுத்தியது [4]. மேற்கோள்கள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia