2019 றக்பி உலகக்கிண்ணம் (2019 Rugby World Cup) உலக ரக்பி அமைப்பின் ஏற்பாட்டில் ஒன்பதாவது முறையாக ஆண்களுக்காக நடத்தப்பட்ட உலகக்கிண்ணப் போட்டியாகும். இது சப்பானில் 2019 செப்டெம்பர் 20 முதல் நவம்பர் 2 வரை 12 அரங்குகளில் நடத்தப்பட்டது. இவ் உலகக்கிண்ணமானது ஆசியக் கண்டத்தில் நடத்தப்பட்ட முதலாவது இறக்பி உலகக்கிண்ணம் ஆகும். 20 அணிகள் பங்குபற்றிய இந்த உலகக்கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் போட்டியை நடத்தும் சப்பான் மற்றும் உருசிய அணிகள் மோதின. இவ் ஆரம்பப் போட்டி சப்பானியத் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றது. சப்பான் முதல் தடவையாக உலகக்கிண்ணக் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.[1][2] இதன் மூலம் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆசிய அணி என்ற சாதனையை சப்பான் படைத்தது.[3] உலகக்கிண்ணத்தின் முதல் ட்ரையினை ரஷ்யாவின் கிரில் கொலொனிட்ஸ்கையும் முதல் ஹட்ரிக் ட்ரையினை சப்பானின் கொடாரோ மட்சுஷிமாவும் பதிவு செய்தனர்.
ஹாகிபிஸ் சூறாவளி காரணமாக ஒரு சில குழுநிலைப்போட்டிகள் கைவிடப்பட்டன.[4] இதன் மூலம் ஒரு றக்பி உலகக்கிண்ணத் தொடரில் போட்டிகள் கைவிடப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
நடப்பு வாகையாளரான நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியிடம் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. 2007 றக்பி உலகக்கிண்ணத்துக்குப் பிறகு முதல் தடவையாக நியூசிலாந்து அணி ஒரு றக்பி உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பமாக இது அமைந்தது. எனினும் மூன்றாவது இடத்துக்கான தீர்மானமிக்க போட்டியில் வேல்சு அணியை வீழ்த்தி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.[5]
உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டத்தை சேர்ந்த தென்னாப்பிரிக்காவும் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த இங்கிலாந்தும் மோதிக்கொண்டன. இப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் முதல் கறுப்பினத் தலைவர் சியா என்பவரின் தலைமையில் அவ்வணி இஙகிலாந்தை 32-12 என வீழ்த்தி வாகைப் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.[6][7] இதன் முலம் அதிக முறை றக்பி உலகக்கிண்ணங்களை வென்ற அணிகளின் பட்டியலில் நியூசிலாந்து அணியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துக் கொண்டது.[8]
தென்னாப்பிரிக்கா இதற்கு முன்பு 1995 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக்கிண்ண தொடர்களையும் வென்றிருந்தது. அதுமட்டும்லாமல், இந்த உலகக்கிண்ண வெற்றியுடன் பன்னாட்டு சர்வதேச றக்பி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்தது. குழுநிலைப் போட்டியில் தோல்வி அடைந்து உலகக்கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் தென்னாப்பிரிக்கா தனதாக்கியது.
2019 உலகக்கிண்ணப் போட்டிகள் பல்லாயிரக்கணக்கான மக்களினால் தொலைக்காட்சிகளில் கண்டுக் களிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட றக்பி உலகக்கிண்ணமாக பதிவு செய்யப்பட்டது.[9]
அரங்குகள்
யோக்கோகாமா
|
சோஃபு
|
ஒயிட்டா
|
புக்குரோய்
|
பன்னாட்டு அரங்கு, யோக்கோகாமா
|
டோக்கியோ அரங்கு
|
ஒயிட்டா அரங்கு
|
சுசுவோக்கா அரங்கு எக்கோப்பா
|
இருக்கைகள்: 72,327
|
இருக்கைகள்: 49,970
|
இருக்கைகள்: 40,000
|
இருக்கைகள்: 50,889
|
|
|
|
|
கோபே
|
 புக்குவோக்கா அக்கட்டனமோரி அரங்கு யோக்கோகாமா பன்னாட்டு அரங்கு சிசுவோக்கா அரங்கு, எக்கோப்பா 2019 ரக்பி உலகக்கிண்ணப் போட்டிகள் நடைபெறும் 12 அரங்குகளின் அமைவிடங்கள்
|
இகாசியொசாக்கா
|
கோபே மிசாக்கி அரங்கு
|
அனசோனோ ரக்பி அரங்கு
|
இருக்கைகள்: 30,132
|
இருக்கைகள்: 24,100
|
|
|
டொயோட்டா
|
குமகாயா
|
டொயோட்டா அரங்கு நகர்
|
குமகாயா ரக்பி அரங்கு
|
இருக்கைகள்: 45,000
|
இருக்கைகள்: 24,000
|
|
|
புக்குவோக்கா
|
சப்போரோ
|
குமமோட்டோ
|
கமைசி
|
புக்குவோக்கா அக்கடனமோரி அரங்கு
|
சப்போரோ அரங்கு
|
குமமோட்டோ அரங்கு
|
கமைசி நினைவு அரங்கு
|
இருக்கைகள்: 20,049
|
இருக்கைகள்: 41,410
|
இருக்கைகள்: 32,000
|
இருக்கைகள்: 16,020
|
|
|
|
|
குழுநிலை ஆட்டங்கள்
குழு ஏ
குழு பி
குழு சி
குழு டி
ஆட்டமிழக்கும் நிலை
இறுதிப் போட்டி
இங்கிலாந்து அணி நான்காவது தடவையாகவும் (1991, 2003, 2007, 2019) தென்னாபிரிக்க அணி மூன்றாவது தடவையாகவும் (1995, 2007, 2019) இறுதிப் போட்டிக்கு நுழைந்தன. இதற்கு முன்பு 2007 றக்பி உலகக்கிண்ண இறுதிப் போட்டியிலும் இவ்விரு அணிகள் சந்தித்து, தென்னாபிரிக்கா வென்று உலகக்கிண்ணத்தைப் பெற்றது. தென்னாபிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தி வாகையாளரானது. முதல் தடவையாக இந்த இறுதிப் போட்டியில் தான் தென்னாபிரிக்கா ட்ரை ஒன்றினை பதிவு செய்தது. இதற்கு முன்பு 1995, 2007 களில் தென்னாபிரிக்கா பெனால்ட்டிகளின் உதவியுடனேயே வென்றிருந்தது.
மேற்கோள்கள்