2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை
தோக்கியோ, சப்பானில் 24 ஆகத்து 2021 முதல் 5 செப்டெம்பர் 2021 வரை நடைபெறும் 2020 கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை பங்கு பற்றுகிறது.[1][2] இலங்கை அணியில் 9 வீரர்கள் (8 ஆண்கள் மற்றும் 1 பெண்) நான்கு விளையாட்டுக்களில் பங்குபற்றுகின்றனர்.[3] தினேசு பிரியந்த ஏரத் ஆடவர் ஈட்டி எறிதல் F46 பிரிவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தங்கப் பதக்கத்தை வென்றதோடு இப்பிரிவில் புதிய உலக சாதனையான 67.79 m தூரத்தைப் பதிவு செய்தார்.[4][5][6] இதன்மூலம், இலங்கை தனது முதல் துணை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பதிவு செய்தது. மேலும், 2020 தோக்கியோ துணை ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை பெற்ற முதலாவது பதக்கமும் இதுவேயாகும். ஏரத், இப்போட்டிகளின் துவக்க விழாவின் போது இலங்கைக் கொடியை ஏந்திச் செல்லும் பெருமையையும் பெற்றிருந்தார்.[7] போட்டியாளர்கள்பின்வரும் பட்டியல் போட்டிப் பிரிவு வாரியான விளையாட்டு வீரர்களின் தகவல்களைக் கொண்டுள்ளது.
பதக்க வெற்றியாளர்கள்
வில்வித்தைஇலங்கையிலிருந்து ஒரு வில்வித்தை வீரர் ஆடவர் ரீகேர்வ் திறந்தநிலைப் போட்டியில் பங்குபற்றுகிறார்.
தடகளம்இலங்கையிலிருந்து ஆறு வீரர்கள் (ஐந்து ஆண்கள் மற்றும் ஒரு பெண்) தடகளாப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர்.
படகு விளையாட்டுக்கள்இலங்கை சார்பில் ஆடவர் தனிநபர் துடுப்பு வலித்தல் நிகழ்வில் ஒருவர் பங்குபற்றுகிறார். இவர், தோக்கியோ, சப்பானில் நடைபெற்ற 2021 FISA ஆசிய மற்றும் ஓசியானியத் தகுதிகாண் ரெகாட்டா போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம் இணை ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றார்.[8] இதன் மூலம், இலங்கை சார்பில் துணை ஒலிம்பிக்கில் படகு விளையாட்டில் பங்கேற்ற முதல் நபர் எனும் பெருமையையும் பெற்றார்.[9]
குறிப்பீடுகள்: FA=இறுதி A (பதக்கம்); FB=இறுதி B (பதக்கம் இல்லா); R=ரெபெசேச் சக்கரநாற்காலி ரென்னிசுஇலங்கை சார்பில் சக்கரநாற்காலி ரென்னிசு நிகழ்வில் ஒருவர் பங்குபற்றுகிறார்.
மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia