2020 பிரேசிலில் கொரோனாவைரசுத் தொற்று
2019-20 கோரோனா தொற்று நாட்டில் முதன் முதலாக தொற்றியது பிப்ரவரி 25ம் நாளில் இத்தாலியில் இருந்து சாவோ பாவுலோ நகருக்கு திரும்பிய 61 வயதான ஆண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது [3] அன்றிலிருந்து ஏப்ரல் 12, 2020 நிலவரப்படி, நாட்டில் 22,169 நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு 1,223 பேர் உயிரிழந்தனர். சமூக பரவல் மூலம் பல மாநிலங்களில் நோய் தொற்று பதிவாகியுள்ளது, மேலும் இந்த தொற்றுநோய் கூட்டாட்சி, மாநில மற்றும் உள்ளூர் அரசுகளிடமும் அரசியல், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காலவரிசைஅறிவியல் ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடுமார்ச் 19 அன்று, விஞ்ஞானிகள் கூற்றின் படி அரசின் தவறான கொள்கை மற்றும் நடவடிக்கைகளால் நாட்டில் 20 லட்சத்திற்கும் மேலான மக்கள் இந்நோய் தொற்றால் இறக்க நேரிடும் என எச்சரித்துள்ளனர் [4] மார்ச் 20 அன்று, இத்தாலியைச் சேர்ந்த வல்லுநர்கள் பிரேசிலும் ஐரோப்பிய நாடுகளைபோன்ற அதே தவறை செய்வதாகவும் சமூக விலகளை முறையாக கடைபிடிக்கப்படவில்ல எனவும் எச்சரிக்கின்றனர். [5] [6] அரசின் கொள்கைமார்ச் 10 அன்று, நாட்டின் அதிபர் ஜாயிர் பொல்சொனெரோ நோய் தொற்று நெருக்கடியை ஊடகங்கள் உருவாக்கிய "கற்பனை" என்று விமர்சனம் செய்தார்.அதை தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். [7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia