2021 இந்திய சமூக ஊடக விதிமுறைகள்2021 இந்திய சமூக ஊடக விதிமுறைகள் (2021 Indian social media regulations) இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டன. சமூக ஊடக நிறுவனங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களுடன் ஒரு தலைமை இணக்க அதிகாரியும் நியமிக்கப்பட்டார். மே மாதம் முதல் அதிகாரிகள் கோரும் போது 36 மணி நேரத்திற்குள் உள்ளடக்கத்தை அகற்ற வேண்டும்.[1] டுவிட்டர், இன்சுடாகிராம் மற்றும் வாட்சப் போன்ற பல நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு தாங்கள் இணங்குவதை உறுதிப்படுத்தத் தவறிவிட்டன. மேலும் சட்டத்தை அமலாக்குவதற்கு 6 மாத காலதாமதத்தைக் கோரின.[2] டுவிட்டருக்கு மாற்றாக கருதப்படும் இந்தியாவைச் சார்ந்த கூ நிறுவனம் தான் சட்டத்திற்கு இணங்குவதாக அறிவித்தது.[3] அதே நேரத்தில் முகநூலும் இணங்குவதற்கான தனது நோக்கத்தை அறிவித்தது.[4] மே மாதம் 26 ஆம் தேதியன்று வாட்சப் நிறுவனம் சமூக ஊடக விதிமுறைகள் தொடர்பான புதிய சட்டங்கள் "அரசியலமைப்புக்கு எதிரானது" என்று அவர்கள் நம்புவதாகக் கூறி இந்திய அரசாங்கத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துள்ளது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia