2022 அசாம் வெள்ளம் (2022 Assam floods) 650,000 மக்களை அவர்களது வீடுகளில் இருந்து வெளியேற்றியது. 25 பேர் வெள்ளத்தால் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.[1]இந்தியாவின்அசாம் மாநிலத்தில் மே மாதத்தில் மூன்று நாட்கள் பெய்த கனமழையால்[2]பிரம்மபுத்திரா நதி கரைபுரண்டு ஓடியது. இதனால் 1,900 கிராமங்கள் நீரில் மூழ்கின.[3]
நிகழ்வுகள்
மே 2022 இல் மாநிலம் முழுவதும் இயல்பை விட அதிகமான மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.[4] மே 25 ஆம் தேதி வரை அசாம் மாநிலத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். 25 பேர் உயிரிழந்தனர்.[5][6] அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கிராமங்களும் 60,000 எக்டேருக்கும் அதிகமான பயிர்களும் பாதிக்கப்பட்டன.[7] அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பல நிவாரண முகாம்கள் மற்றும் விநியோக மையங்களை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் அளித்தனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இரயில் பாதைகளும் பாதிக்கப்பட்டன.[8]