2022 உக்ரைன் அணுமின் நிலையங்களில் உருசிய படையெடுப்பின் தாக்கம்உக்ரைனில் நான்கு அணுமின் நிலையங்கள் உள்ளன. இவற்றைத் தவிர 1986 செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த தளமான செர்னோபில் விலக்கு மண்டலமும் உள்ளது. [1] மார்ச் 11 நிலவரப்படி, 2022 இல் உக்ரைன் மீதான உருசிய படையெடுப்பின் போது செர்னோபில் மற்றும் சபோரிசியா அணுமின் நிலையம்[2] [3]இரண்டும் போர்களைக் கண்டன. இந்த படையெடுப்பு, மின் உற்பத்தி நிலையங்களின் நிலை பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு விவாதத்தை தூண்டியுள்ளது. சாத்தியமான பேரழிவுகள் பற்றிய அச்சமும், [4] பிற ஐரோப்பிய நாடுகளின் அணுசக்தி திட்டங்கள் பற்றிய விவாதங்களும் தூண்டப்பட்டன.[5] போர்கள்கெயிவ் தாக்குதலின் ஒரு பகுதியாக, படையெடுப்பின் முதல் நாளான பிப்ரவரி 24 அன்று செர்னோபில் போர் நடந்தது. உருசியப் படைகள் அதே நாளில் செர்னோபில் விலக்கு மண்டலத்தைக் கைப்பற்றின. [6] தெற்கு உக்ரைன் தாக்குதலின் போது உருசியப் படைகள் முன்னேறியதால் எனர்கோடர் நகர முற்றுகை பிப்ரவரி 28 அன்று தொடங்கியது. சாபோரிழ்சியா அணுமின் நிலையத்தின் மீதான உருசி தாக்குதல் மார்ச் 3 அன்று தொடங்கியது. உருசியா அடுத்த நாள் மின் நிலையத்தை கைப்பற்றியது. மார்ச் 6 அன்று, பன்னாட்டு அணு ஆற்றல் முகமை இந்நடவடிக்கை குறித்த கவலையை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டது. மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகளில் உருசிய இராணுவத்தின் தலையீடு மற்றும் தகவல்தொடர்புக்கு மின்நிலையங்கள் பயன்படுத்திய அலைபேசி மற்றும் இணைய வலைப்பின்னல் வெட்டுக்கள் பற்றிய கவலைகள் இவ்வறிக்கையில் வெளிப்பட்டன.[7] பாதுகாப்பு கவலைகள்செர்னோபில் மற்றும் சாபோரிசியா மின் உற்பத்தி நிலையம் ஆக்கிரமிக்கப்பட்டதில்[8] இருந்து, பன்னாட்டு அணு ஆற்றல் முகமையும் உக்ரேனிய அரசாங்கமும் பல பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளன. ஊழியர்களுக்கு சரியான ஓய்வு கொடுக்கத் தவறியது மற்றும் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாதது உட்பட பல நடவடிக்கைகல் இதில் இடம்பெற்றுள்ளன. [9] [10] [11] [12] பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருந்தகங்கள் படையெடுப்பைத் தொடர்ந்து முதல் இரண்டு வாரங்களில் அயோடின் மாத்திரைகள் விற்றுவிட்டதாக அறிவித்தன. [13]பல ஐரோப்பிய அணுசக்தி பாதுகாப்பு அதிகாரிகள் இன்றுவரை குறிப்பிடத்தக்க கதிரியக்க பேரழிவு ஏற்படுவதற்கான உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று முடிவு செய்துள்ளனர். [14] [15] [16] மார்ச் 6 அன்று, பிரெஞ்சு குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் உருசிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ஓர் அழைப்பு விடுத்தார். "இந்த அணு ஆலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவை போரிலிருந்து விலக்கப்பட வேண்டும்" என்றும் புடினை அவர் வலியுறுத்தினார். இந்த அழைப்பைத் தொடர்ந்து, கிரெம்ளின் ஒரு அறிக்கையை வெளியிட்டது, அந்த அறிக்கையில் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாக பன்னாட்டு அணு ஆற்றல் முகமை மற்றும் உக்ரைனிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக இருப்பதாகக் கூறியது. [17] ஐரோப்பாவில் அணுசக்தி பற்றிய விவாதங்கள்உக்ரைன் மீதான படையெடுப்பு ஐரோப்பாவில் அணுசக்தியின் எதிர்காலம் பற்றிய விவாதத்தை அதிகரிக்கத் தூண்டியது, உருசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக அணுசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஆதரவாக பல வர்ணனையாளர்கள் வாதிடுகின்றனர். [18] [19] [20] [21] 2011 ஆம் ஆண்டு முதல் நாட்டில் உள்ள பெரும்பாலான அணுமின் நிலையங்களை மூடிவரும் செருமனி அணுசக்தியை படிப்படியாக வெளியேற்றுவது குறித்த விவாதங்களை கண்டுள்ளது. செருமனியில் மீதமுள்ள மூன்று அணுமின் நிலையங்களும் மூடப்பட உள்ளன. [22] [23] [24] பிப்ரவரி 28 அன்று, செருமன் பொருளாதார அமைச்சர், செருமன் அரசாங்கம் நாட்டில் எஞ்சியிருக்கும் அணுமின் நிலையங்களை படிப்படியாக நிறுத்துவது பற்றி பரிசீலிக்கும் என்று கூறினார். [25] மார்ச் 9 அன்று, செருமனி அணுசக்தியை படிப்படியாக நிறுத்துவதற்கான முடிவுகளை நிராகரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது [26] பெல்சியமும் அதன் தற்போதைய அணு உலைகளின் ஆயுட்காலத்தை நீட்டிப்பது பற்றிய விவாதங்களில் ஈடுபட்டது.[27] ஐரோப்பா ஒட்டுமொத்தமாக 41% எரிவாயு இறக்குமதியையும், 27% எண்ணெய் இறக்குமதியையும் உருசியாவிடமிருந்து பெறுகிறது, புதைபடிவ எரிபொருள்களுக்காக உருசிய சர்வாதிகார அரசாங்கத்தைச் சார்ந்திருக்கும் நிலைக்கு ஐரோப்பா தம்மைக் குறைத்துக்கொண்டது." [28] என்று சியார்ச்சு மான்பியோட்டு பிரித்தானிய தினசரியான தி கார்டியனில் எழுதினார். சில வர்ணனையாளர்கள் அணுசக்தி தொழில்நுட்பத்தின் உருசிய ஏற்றுமதிகள் தொடர்பான பிரச்சினைகளையும் எழுப்பியுள்ளனர். பின்லாந்தில், படையெடுப்பு காரணமாக அன்னிகிவி அணுமின் நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டது. [29] [30] இயோகனசுபர்க்கு பல்கலைக்கழகத்தின் ஆர்ட்மட் விங்க்லர், படையெடுப்பின் காரணமாக உருசிய அரசு அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் சர்வதேச வணிகத்தில் குறிப்பிடத்தக்க இழப்பை எதிர்கொண்டதாகக் கூறினார், "உருசிய வெளிநாட்டு அணுசக்தி கட்டுமானங்களின் சகாப்தம் விரைவில் முடிவடையும்" என்றும் அவர் கூறினார். [31] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia