2022 காபூல் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு (August 2022 Kabul mosque bombing) ஆப்கானித்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள அபு பக்கர் அல் சாதிக் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் குறிக்கிறது.[2][3] ஆகத்து மாதம் நடந்த இக்குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 40 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.[4][5] வெடிவிபத்தை அடுத்து பள்ளிவாசலுக்கு அருகில் வசிப்பவர்களும் துப்பாக்கிச் சத்தத்தை கேட்டதாக தெரிவித்தனர்.[2]
பாதிக்கப்பட்டவர்கள்
காபூலில் உள்ள அவசர மருத்துவமனையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட 27 பேர் அனுமதிக்கப்பட்டனர்.[5] மருத்துவமனைக்கு வரும்பொழுதே இருவரும் மருத்துவமனை சிகிச்சையின்போது ஒருவரும் மரணமடைந்தனர்.[5] பலியானவர்களில் இசுலாமிய மத போதகரான அமீர் முகமது காபூலியும் ஒருவர் என தெரியவந்துள்ளது. முகமது காபூலி இசுலாமியப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.[1][6]
மாலை நேர தொழுகையின்போது இந்த தாக்குதலானது நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.[7]