2022 தாமஸ் & உபேர் கோப்பைவார்ப்புரு:Infobox badminton event 2022 தாமஸ் மற்றும் உபேர் கோப்பை (2022 Thomas & Uber Cup) தொடர்பான பன்னாட்டு பூப்பந்தாட்டப் போட்டிகள் தாய்லாந்து நாட்டின் நொந்தபுரி நகரத்தில் உள்ள இம்பேக்ட் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த பூப்பந்தாட்டப் போட்டிகள் 2022-ஆம் ஆண்டின் மே மாதத்தில் 8 முதல் 15 முடிய நடைபெற்றது.[1][2] 35வது தாமஸ் கோப்பை மற்றும் 29வது உபேர் கோப்பைக்கான பூப்பந்தாட்டப் போட்டிகளில், தலா 16 நாடுகளின் ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் சென்ற முறை வெற்றியாளர்களான இந்தோனேசியாவின் ஆடவர் ஒற்றையர் அணியும், சீனாவின் மகளிர் ஒற்றையர் அணியும் கலந்து கொள்கிறது. நாக்-அவுட் சுற்றுப் போட்டிகளில் விளையாடிய 16 நாட்டு ஒற்றையர், இரட்டையர், ஆடவர் & மகளிர் அணிகளில், டென்மார்க், இந்தியா, இந்தோனேசியா மற்றும் சப்பான் அணிகள் தாமஸ் கோப்பைக்காக அரையிறுதிக்கு முன்னேறியது. சீனா, சப்பான், தென் கொரியா மற்று தாய்லாந்து அணிகள் உபேர் கோப்பைக்கான அரையிறுதிக்கு முன்னேறியது. ஆடவர் ஒற்றையர் பூப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் இந்தியாவும், இந்தோனேசியாவும் மோதியது. இந்தியா 3-0 எனும் கணக்கில் இந்தோனேசியாவை வென்று முதன் முறையாக தாமஸ் கோப்பையை கைப்பற்றியது. மகளிர் பிரிவின் இறுதிப் போட்டியில் தென் கொரியா 23-2 கணக்கில் சீனாவை வென்று தாமஸ் கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டி தரவரிசைதாமஸ் கோப்பைதாமஸ் கோப்பையை இந்தியா வென்றது.[3][4]
உபேர் கோப்பைதென் கொரியா முதலிடத்தை வென்றது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia