2023 தோடா பேருந்து விபத்து2023 தோடா பேருந்து விபத்து (2023 Doda bus accident) என்பது சம்மு மற்றும் காசுமீரில் உள்ள தோடா மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் 15 நவம்பர் 2023 அன்று, பயணிகள் பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் 300-400 அடி (91-122 மீ) உயரத்தில் இருந்து கவிழ்ந்த விபத்தைக் குறிக்கும். இந்தப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 39 பேர் இறந்தனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர். விபத்துJK02CN-6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து, 54 பயணிகளுடன், ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு நடத்துனரை ஏற்றிச் சென்றது, அது படோட்-கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் துருங்கல்-அசார் அருகே பள்ளத்தாக்கில் பாய்ந்து 300–400 அடிகள் (91–122 மீட்டர்கள்) உயரத்திலிருந்து கீழே விழுந்தது. பேருந்து ராஜ்கரில் இருந்து 2.5 மைல்கள் (4 கிலோமீட்டர்) பயன்படுத்தப்படாத சாலையில் தரையிறங்கியது . [1] பேருந்து அதன் 38 பயணிகள் கொள்ளளவைத் தாண்டியிருந்ததன் காரணமாக ஓட்டுநரால் இறுக்கமான திருப்பத்தைச் சமாளித்து கடக்க இயலாமல் போயிருந்திருக்கலாம். மீட்புசம்பவம் நடந்த உடனேயே, அபாபீல் மற்றும் அல்-கைர் அமைப்பின் தன்னார்வலர்கள், உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்புப் பணியைத் தொடங்கினர். [2] அவர்களுடன் பின்னர் காவல்துறை, மாநில பேரிடர் மீட்பு படை மற்றும் பிற அரசு மீட்பு நிறுவனங்களில் உள்ளவர்களும் இணைந்தனர். படுகாயமடைந்தவர்களை மீட்க இந்திய விமானப்படை உலங்கூர்திகள் வரவழைக்கப்பட்டன. [3] பிரதமர் நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்தும், குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார். உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம் இழப்பீடு தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். [4] உள்துறை அமைச்சர் அமித் சா உயிரிழப்புகள் குறித்த வேதனையைப் பகிர்ந்து கொண்டார், குடும்பங்களுக்கு இரங்கலைத் தெரிவித்தார், மேலும் உள்ளூர் நிர்வாகத்தால் நடந்து வரும் மீட்புப் பணிகளை ஏற்றுக்கொண்டார். லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்கா இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உதவி வழங்க கோட்ட ஆணையர் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தெரிவித்து, இரங்கல் தெரிவித்தார். நிர்வாகத்தின் மூலம் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அவர் வலியுறுத்தினார். சனநாயக முற்போக்கு ஆசாத் கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மேம்படுத்தப்பட்ட சாலை உள்கட்டமைப்பின் அவசியத்தை வலியுறுத்தினார் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவைத் தெரிவித்தார். தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு அவர் சின்காவிற்கு அழைப்பு விடுத்தார். [5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia