3-மெத்தில்-2-பெண்டனோன் (3-Methyl-2-pentanone) என்பது C6H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல்சேர்மமாகும். 3-மெத்தில்பெண்டேன்-2-ஒன், மெத்தில் ஈரிணைய பியூட்டைல் கீட்டோன் என்ற பெயர்களாலும் இக்கோட்டோன் அழைக்கப்படுகிறது. அலிபாட்டிக் கீட்டோனான இது 2-எக்சனோன் சேர்மத்திற்கான மாற்றியனுமாகும். ஒரு கரைப்பானாகவும், தொகுப்பு வினைகளில் ஓர் இடைநிலையாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் தொழில்துறை முக்கியத்துவம் குறைவாக உள்ளது.
அசிட்டால்டிகைடுடன் 2-பியூட்டானோனைச் சேர்த்து கார வினையூக்கியின் உதவியுடன் ஆல்டால் ஒடுக்க வினை மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் 4-ஐதராக்சி-3-மெத்தில்-2-பெண்டனோன் உருவாகிறது. இது ஒரு அமில வினையூக்கியினால் நீர்நீக்கம் செய்யப்பட்டு 3-மெத்தில்-3-பெண்டென்-2-ஒன் ஆக உருவாகிறது. தொடர்ந்து பலேடியம்வினையூக்கியானால் ஐதரசனேற்றம் செய்யப்பட்டு இறுதியாக 3-மெத்தில்-2-பெண்டனோன் உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
↑"3-Methyl-2-pentanone". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). Retrieved 19 December 2021.