4-அனிசால்டிகைடு
4-அனிசால்டிகைடு (4-Anisaldehyde) என்பது C8H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-அனிசால்டிகைடு, அனிசிக் ஆல்டிகைடு, அனிசு ஆல்டிகைடு போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. பொதுவாக இயற்கை மற்றும் செயற்கை நறுமணப்பொருள்கள் இரண்டிலும் காணப்படுகிறது. 4-அனிசால்டிகைடின் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையமும் ஓர் ஆல்டிகைடு மற்றும் மெத்தாக்சி குழுவும் இடம்பெற்றுள்ளன. தெளிவான நீர்மமான இச்சேர்ம்ம் வலுவான அரோமாட்டிக் பண்பைப் பெற்றுள்ளது. ஆர்த்தோ-அனிசால்டிகைடு, மெட்டா-அனிசால்டிகைடு என்ற தொடர்புடைய இரண்டு மாற்றியன்கள் அறியப்பட்டாலும் அவை அரிதாகவே தோன்றுகின்றன. மலர் போன்ற இனிய நுகரும் வாசனையைக் கொண்டுள்ள சேர்மமாகும். உற்பத்திமெத்தாக்சிதொலுயீனை (பாரா-கிரெசைல் மெத்தில் ஈதர்) மாங்கனீசு டை ஆக்சைடைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து வர்த்தகமுறையில் அனிசால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. சில ஆல்க்கால் தன்மை கொண்ட பானங்களில் காணப்படும் அனிதோல் எனப்படும் நறுமணப்பொருளை ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம் [3]. பயன்கள்அமைப்புரீதியாக வனில்லின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் அனிசால்டிகைடு நறுமணம் மற்றும் நறுமணச்சுவை தொழிலில் பெரிதும் பயன்படுகிறது [3]. மருந்துகள் மற்றும் நறுமணங்கள் போன்ற பிற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கும் போது இடைநிலை விளைபொருளாகவும் பயன்படுகிறது. ஆர்த்தோ-அனிசால்டிகைடு அதிமதுரத்தின் நறுமணம் போன்ற மணத்தை கொண்டதாகும். அமிலம் மற்றும் எத்தனாலிலுள்ள பாரா-அனிசால்டிகைடு மென்படல நிறப்படிவு பிரிகையியலில் மிகுந்த பயனை அளிக்கிறது [4]. தட்டுகளிலுள்ள வெவ்வேறு வேதிச்சேர்மங்கள் வெவ்வேறு வண்ணங்களைத் தருவதால் வேறுபடுத்தி அறிவது எளிமையாக முடிகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia