4-அயோடோபென்சாயிக் அமிலம்
4-அயோடோபென்சாயிக் அமிலம் (4-Iodobenzoic acid) என்பது C7H5IO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். பாரா-அயோடோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இந்த சேர்மம் அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் அயோடோபென்சாயிக் அமிலத்தினுடைய மாற்றியமாகவும் கருதப்படுகிறது.[3] கட்டமைப்பு![]() 4-அயோடோபென்சாயிக் அமிலத்தின் எக்சு-கதிர் படிகவியல் ஆய்வு, திட நிலையில் இச்சேர்மம் ஐதரசன் -பிணைக்கப்பட்ட இருபடிகளாகப் படிகமாக்குகிறது என்பதைக் காட்டுகிறது. இவை அவற்றின் அரோமாட்டிக் வளையங்களுக்கு செங்குத்தாக அடுக்கி வைக்கப்படுகின்றன. அருகிலுள்ள இருபடிகளின் அயோடின் அணுக்களும் வான் டெர் வால்சு விசைகள் காரணமாக ஒன்றையொன்று நோக்கியதாக உள்ளன. [4] தயாரிப்புபொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் பாரா-அயோடோதொலுயீனைச் சேர்த்து ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலம் 4-அயோடோபென்சாயிக் அமிலம் ஆய்வகத்தில் தயாரிக்கப்படுகிறது.[5] வினைகள்4-அயோடோபென்சாயிக் அமிலத்தின் கார்பாக்சிலிக் அமில செயல்பாடு மெத்தனாலுடன் பிசர்-சிபீயர் எசுத்தராக்கல் வினைக்கு உட்பட்டு ஓர் எசுத்தரான மெத்தில் 4-அயோடோபென்சோயேட்டை உருவாக்குகிறது.[6] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia