4-ஐதராக்சிபென்சால்டிகைடு
4-ஐதராக்சிபென்சால்டிகைடு (4-Hydroxybenzaldehyde) என்பது C7H6O2 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐதராக்சிபென்சால்டிகைடின் மூன்று மாற்று வடிவங்களில் இச்சேர்மமும் ஒன்றாகும். ஆர்க்கிடேசி குடும்பத்து தாவரங்களான காசுடிரோதியா இலாட்டா மற்றும் காலியோலா ஃபேபரி முதலிய தாவரங்களில் 4-ஐதராக்சிபென்சால்டிகைடு காணப்படுகிறது. வேனில்லா என்ற நிலம்வாழ் ஏறுகொடியிலும் இச்சேர்மம் காணப்படுகிறது. தயாரிப்புதாகின் ஆக்சிசனேற்றம் என்பது ஒர் ஆக்சிசனேற்ற ஒடுக்க வினையாகும். இவ்வினையில் ஒர் ஆர்த்தோ அல்லது பாரா ஐதராக்சினேற்ற பீனைல் ஆல்டிகைடு (2- ஐதராக்சிபென்சால்டிகைடு அல்லது 4-ஐதராக்சிபென்சால்டிகைடு) அல்லது கீட்டோன், கார நிலையில் ஐதரசன் பெராக்சைடுடன் வினைபுரிந்து பென்சீன்டையால் மற்றும் கார்பாக்சிலேட்டு முதலானவை உருவாகின்றன. மொத்தத்தில் கார்பனைல் தொகுதியானது ஆக்சிசனேற்றப்படுகிறது, மற்றும் ஐதரசன் பெராக்சைடு குறைக்கப்படுகிறது. வளர்சிதை மாற்றம்கேரட்டில் (தௌகசு கரோட்டா) பாரா-ஐதராக்சிபென்சால்டிகைடு ஐதரசன் நீக்கநொதி காணப்படுகிறது[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia