4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால்
4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால் (4-amino-3-methyl-1-naphthol) என்பது C11H11NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். செயற்கை முறையில் தயாரிக்கப்படும் ஒரு மெனாடையோன் நேரிணை சேர்மமாக இது கருதப்படுகிறது. 4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தாலை வைட்டமின் கே7 என்றும் அழைக்கிறார்கள்.[1] 1950 ஆம் ஆண்டில் வைட்டமின் கே செயல்பாட்டைக் கொண்ட ஒரு சேர்மமாக இது அங்கீகரிக்கப்பட்டபோது பெயரிடப்பட்டது.[2][3] 2-மெத்தில்நாப்தலீன் அல்லது மெனாடியோனிலிருந்து 4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால் தயாரிக்கப்படுகிறது. இது ஐதரோகுளோரிக் அமிலத்திலிருந்து படிக ஐதரோகுளோரைடு உப்பை (C11H11NO·HCl) உருவாக்குகிறது. குறைந்தபட்சம் 1 கிராம் உப்பு 25 மில்லி தண்ணீரில் 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் கரைகிறது. காற்று மற்றும் ஒளியின் வெளிப்பாட்டின் போது உப்பு இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்து அடர் ஊதா நிறமாக மாறுகிறது.[1] 4-அமினோ-3-மெத்தில்-1-நாப்தால் அல்லது இதன் ஐதரோகுளோரைடு உப்பு பைலோகுயினோன் மற்றும் மெனாடையோன் போன்ற வைட்டமின் கே இன் வணிக மருத்துவ வடிவங்களாகப் பயன்படுத்தப்படவில்லை.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia