4-எத்தில்தொலூயீன்
4-எத்தில்தொலூயீன் (4-Ethyltoluene) என்பது CH3C6H4C2H5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். எத்தில்தொலூயீன் பெற்றுள்ள மூன்று மாற்றியன்களில் இச்சேர்மமும் ஒரு மாற்றியனாகும். 3-எத்தில்தொலூயீன், 2-எத்தில்தொலூயீன் என்பவை மற்ற இரண்டு மாற்றியன்களாகும். மூன்று மாற்றியன்களுமே நிறமற்ற நீர்மங்களாகும். இவை சிறப்புமிக்க சில பாலிசிடைரீன்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகின்றன. தயாரிப்பும் பயன்களும்தொலுயீனை எத்திலேற்றம் செய்து 4-எத்தில்தொலூயீன் தயாரிக்கப்படுகிறது. CH3C6H5 + C2H4 → CH3C6H4C2H5 அமில வினையூக்கிகளால் இவ்வினை நிகழ்த்தப்படும் போது 2-எத்தில்தொலூயீன், 3-எத்தில்தொலூயீன், 4-எத்தில்தொலூயீன் என்ற மூன்று மாற்றியன்களின் கலவை உருவாகிறது. சிறுமாற்றம் செய்யப்பட்ட சியோலைட்டு வினையூக்கியினால் வினை நிகழும்போது தெரிவுசெய்யப்பட்ட விளைபொருளாக 4-எத்தில்தொலூயீன் உருவாகிறது[1]. 4-எத்தில்தொலுயீனை, ஐதரசன் நீக்கம் செய்து 4-வினைல்தொலுயீன் தயாரிக்கப்படுகிறது[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia