4-புளோரோபென்சாயிக் அமிலம்
4-புளோரோபென்சாயிக் அமிலம் (4-Fluorobenzoic acid) C7H5FO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-புளோரோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் நிறமற்ற திண்மமாகக் காணப்படுகிறது. பென்சாயிக் அமிலம் மற்றும் கார்பாக்சிலிக் அமிலம் அகியனவற்றின் வழிப்பொருளாகவும், செயற்கைமுறையிலான ஒரு இடைநிலைச் சேர்மமாகவும் 4-புளோரோபென்சாயிக் அமிலம் கருதப்படுகிறது. தயாரிப்புசிகீமான் வினையின் வழியாக 4-புளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. எத்தில் எசுத்தராக பாதுகாக்கப்பட்டுள்ள 4-அமினோபென்சாயிக் அமிலம் முதலில் ஈரசோனியம் உப்பாக்கப்படுகிறது. பின்னர் டெட்ராபுளோரோபோரேட்டு சேர்ப்பதன் மூலம் விளைபொருளுடன் புளோரைடு அறிமுகப்படுத்தப்படுகிறது. எசுத்தரை நீராற்பகுப்பு செய்தால் அது தனி அமிலமாக மீள்விக்கப்படுகிறது[1] 4-புளோரோசின்னமிக் அமிலம் வளிம உயிரின மாற்றம் மூலமாக 4-புளோரோபென்சாயிக் அமிலம் உருவாதலும் அறியப்பட்டுள்ளது[2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia