4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு
4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு (4-Methylbenzyltrimethylammonium hydroxide) என்பது C11H18NOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நான்கிணைய அம்மோனியம் சேர்மமாக இது வகைப் படுத்தப்படுகிறது. 4-மெத்தில்பென்சில் புரோமைடை மூயெத்திலமீனுடன் சேர்த்து வினைபுரியச் செய்து தொடர்ந்து தண்ணீரில் கரைக்கப்பட்ட வெள்ளி ஆக்சைடை சேர்த்து கிளறினால் 4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடு உருவாகும்.[1] வினைகள்தொலுயீன் சேர்மத்திலுள்ள பீனோதயசீனுடன் 4-மெத்தில்பென்சில்மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடை சேர்த்து சூடுபடுத்தினால் இது ஆப்மான் நீக்கல் வினைக்கு உட்பட்டு (2.2)பாராசைக்ளோபேன் சேர்மமாக உருவாகிறது.[1] மற்ற நான்கிணைய அம்மோனியம் ஐதராக்சைடுகளுடன் (எ.கா. (5-மெத்தில்-2-தையீனைல்மெத்தில்) மும்மெத்திலமோனியம் ஐதராக்சைடுடன் இதைச் சேர்த்து சூடுபடுத்தினால் [2.2]பாராசைக்ளோ(2,5)தயோபீனோபேன் சேர்மத்தைப் பெறலாம்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia