40 பழ மரம்![]() 40 பழங்கள் கொண்ட மரம் (Tree of 40 Fruit) என்பது சிரக்கியூஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் சாம் வான் அகென் என்பவர் ஒட்டுதல் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய பழ மரங்களில் ஒன்றாகும்.[1] ஒவ்வொரு மரமும் அமெரிக்காவில் சூலை முதல் அக்டோபர் மாதம் வரை வரிசையாக பழுக்கக்கூடிய 'புரூனசு' பேரினத்தைச் சார்ந்த 40 வகையான 'உள்ளோட்டுச் சதைக்கனியினைத்' தருகிறது.[2][3] வளர்ச்சிசாம் வான் ஏகன் நியூயார்க் நகரில் உள்ள சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் சிற்பக்கலை இணை பேராசிரியர் ஆவார்.[4] பென்சில்வேனியா டச்சு குடும்பத்தைச் சார்ந்த அவரது குடும்பத்திற்கு ஒரு பண்ணை இருந்தது. மேலும் ஒரு சமகால கலைஞரான அவர் பாரம்பரிய கலை உருவாக்கத்திற்கு அப்பால் பணியாற்றுகிறார். தகவல் தொடர்பு, தாவரவியல் மற்றும் வேளாண்மையில் புதிய முன்னோக்கு கலை திட்டங்களை உருவாக்குகிறார்.[5][6] ![]() வான் ஏகன் 2008 ஆம் ஆண்டில், கலை சார்த்த ஒரு செயல் திட்டத்திற்காக ஒரு பன்முக பூக்களைத் தரும் மரம் ஒன்றை உருவாக்க மாதிரிகள் தேடும் போது, நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்படவிருந்த நியூ யார்க் ஸ்டேட் வேளாண்மை பரிசோதனை நிலையத்தின் 3 ஏக்கர் (1.2 ஹெக்டேர்) பழத்தோட்டத்தை வாங்கினார்.[2][3] அவர் அங்கு வளர்ந்து வரும் 250 பாரம்பரிய மரபுகள் உள்ள சிலவற்றிலிருந்து மொட்டுக்களை ஒரு வகை மரத்தின் மீது ஒட்டத் துவங்கினார்.[3] சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு,அந்த மரம் நாற்பது வெவ்வேறு கிளைகளை "தாய்" மரங்களிலிருந்து வளரச்செய்தது. ஒவ்வொரு கிளையிலிருந்தும் வித்தியாசமான பழங்களுடன் -வாதுமை, சீமை வாதுமைப்பழம், செர்ரி, நெக்டரின், குழிப்பேரி மற்றும் பிளம் வகைகள் உட்பட- பல்வேறு பழங்களைக் கொண்ட ஒரு மரம் வளர்ந்தது. ![]() ஒவ்வொரு வசந்தகாலத்திலும் அந்த மரம் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களின் கலவையாக பூத்துக்குலுங்கும் .[3] பரவல்சாம் வான் ஏகன் சிற்பக்கலை இணை பேராசிரியராகப் பணிபுரியும் சிரக்கியூஸ் பல்கலைக்கழக வளாகத்தில் "மரம் 75",- 40 பழமரம் 2014ஆம் ஆண்டளவில், வான் ஏகன் '40 பழமரத்தின் 16 மரங்களை உற்பத்தி செய்து, சமூக தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் சேகரிப்புகள் உட்பட பல்வேறு தனியார் மற்றும் பொது இடங்களில் நிறுவினார்.[3] இவற்றுள் நியூட்டன், மாசசூசெட்ஸ்; பவுண்ட் ரிட்ஜ், ஷாட்ஹில்ஸ்; நியூ செர்சி; பென்டொன்வில்லே, ஆர்கன்சா மற்றும் சான் ஜோஸ், கலிபோர்னியா ஆகியவை முக்கியமான இடங்களாகும்.[3][7] மரங்கள் நிறைந்த ஒரு பழத்தோட்ட நகரத்தை விரிவுப்படுத்தவும் திட்டமிடுகிறார்.[3] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia