465, (Naalu Aaru Anju), திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். சாய் சத்யம் எழுதி இயக்க, எஸ். எல். பிரபு இப்படத்தை தயாரித்தார். இது சாய் சத்யம் இயக்கிய முதல் தமிழ் திரைப்படமாகும்.[1][2][3][4] கார்த்திக் ராஜ், நிரஞ்சனா மற்றும் மனோபாலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[5]மார்ச் 24, 2017 இல் இந்த படம் வெளியிடப்பட்டது.[6]ஜெய்சங்கர் , ஜெயலலிதா மற்றும் மனோரமா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து 1966 ஆம் ஆண்டு வெளியான யார் நீ என்ற பழைய படத்தை தழுவலாக வைத்து எடுக்கப்பட்டத் திரைப்படமாகும்.[2][7][8]
நடிகர்கள்
2015 ஆம் ஆண்டு வெளியானநாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் கார்த்திக் ராஜ். தனது இரண்டாவது படமான 465-யில் கதாநாயகனானார். இரு படங்களும் நல்ல வசூலை செய்யவில்லை என்றாலும், அவரது இரு திரைப்படங்களிலும் அவரது நடிப்பு நன்கு பாராட்டப்பட்டது.
ஜெய் (கார்த்திக் ராஜ்) மனோபாலாவுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார்.கார்த்திக் இன்னொரு பெண்னகைக் காதலிக்கிறார். ஆனால் சக மருத்துவர் கார்த்திக்கை காதல் செய்கிறார்.ஒரு குறிப்பிட்ட நேரத்தில், மனோபாலா மற்றும் பெண் மருத்துவர் இருவரும் மர்மமான சூழ்நிலைகளில் இறந்து போகிறார்கள்.ஆனால் கார்த்திக், அவரது மூதாதையர் வீட்டிற்கு திரும்பு வேண்டும் எனக் கருதினார்.ஆனால், ஒரு பெண்ணின் உருவம் கார்த்திக்கின் மனத்தில் திரும்பத் திரும்ப வந்ததால், பைத்தியம் என்று நினைத்து கார்த்திக்கை ஒரு மனநல மருத்துமனையில்அனுமதிக்கின்றனர். கார்த்திக்கிற்கு என்னவானது என்பதே மீதிக் கதையாகும்.[10][11][12]