8-அனிலினோநாப்தலீன்-1-சல்போனிக் அமிலம்
8-அனிலினோநாப்தலீன்-1-சல்போனிக் அமிலம் (8-Anilinonaphthalene-1-sulfonic acid) என்பது C16H13NO3S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1-அனிலினோ-8-நாப்தலீன்சல்போனேட்டு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இச்சேர்மத்தில் சல்போனிக் அமிலத் தொகுதி மற்றும் அமீன் தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஒளிரும் மூலக்கூற்று ஆய்வில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது [1]. உதாரணமாக புரதங்களில் ஈந்தணைவி பிணைப்புகளால் தூண்டப்படும் இணக்கமாக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதற்கு 8-அனிலினோநாப்தலீந்1-சல்போனிக் அமிலத்தை பயன்படுத்த முடியும். புரத மேற்பரப்பில் உள்ள நீரெதிர்ப்பு மண்டலங்களை இணைக்கும்போது இச்சேர்மத்தின் ஒளிரும் பண்புகள் மாறும். ஒரு குறிப்பிட்ட ஈந்தணைவியின் இருப்பு மற்றும் அது இல்லாத நிலையில் ஒளிர்வை ஒப்பீடு செய்யும்போது ஈந்தணைவியின் பிணைப்பு புரதத்தின் மேற்பரப்பை எவ்வாறு மாற்றும் என்ற தகவல் கிடைக்கிறது. மைட்டோகாண்ட்ரிய சவ்வுகளுக்கு இச்சேர்மத்தின் ஊடுருவுதல் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது [2]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia