ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் (Fast & Furious (2009 film)) என்பது ஜஸ்டின் லின் இயக்கத்தில் கிறிஸ் மோர்கன் எழுதி 2009 ஆம் ஆண்டு வெளியான அதிரடித் திரைப்படமாகும். இது தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ் (2001) மற்றும் 2 ஃபாஸ்ட் 2 ஃபியூரியஸின் (2003) நேரடித் தொடர்ச்சியாகும், அத்துடன் ஃபாஸ்ட் & ஃபியூரியன்சின் நான்காவது பாகமாகும். இதில் வின் டீசல், பால் வாக்கர், மிச்சேல் ரோட்ரிக்ஸ், ஜோர்டானா ப்ரூஸ்டர் ஆகியோர் நடித்துள்ளனர். நான்காவது பாகம் சூலை 2007 இல் அறிவிக்கப்பட்டது, டீசல், வாக்கர், ரோட்ரிக்ஸ் மற்றும் ப்ரூஸ்டர் ஆகியோர் மீண்டும் அணி சேர்கின்றனர்.[3] முந்தைய பாகங்களில் நடிகர்களின் இழப்பினைக் கருத்திற்கொண்டு, தி ஃபாஸ்ட் அண்ட் தி ஃபியூரியஸ்ஃ டோக்கியோ டிரிப்ட் (2006) ஃபாஸ்ட் & ஃபியூரியஸின் நிகழ்வுகளுக்கு அப்பால் நடப்பதாக இந்தப் படம் உருவாக்கப்பட்டது, அதே நேரத்தில் குறும்படம் லாஸ் பாண்டோலெரோஸ் (2009) தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.[4] முதன்மைப் புகைப்படம் எடுத்தல் பிப்ரவரி 2008 இல் தொடங்கி சூலை மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டொமினிகன் குடியரசு உள்ளிட்ட படப்பிடிப்பு இடங்களில் முடிவடைந்தது. லின், மோர்கன் மற்றும் இசையமைப்பாளர் பிரையன் டைலர் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பினர். ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் டி-பாக்ஸ் மோஷன் கொண்ட முதல் திரையரங்க வெளியீடு ஆகும். டீசல் தயாரித்த முதல் படமும் இதுவாகும். கதைக் கருடொமினிக்கன் டொரெட்டோ மற்றும் அவரது காதலி லெட்டி, டெகோ லியோ, ரிக்கோ சாண்டோஸ், காரா, ஹான் லூ ஆகியோரைக் கொண்ட குழுவினர் டொமினிகன் குடியரசில் எரிபொருள் வாகனங்களைக் கடத்திச் செல்கின்றனர். காவல் துறையினர் தங்கள் பாதையில் இருப்பதாக டோம் சந்தேகிக்கிறார், மேலும் லெட்டியை பிடிபடாமல் பாதுகாக்க அவரை விட்டுவிடுகிறார். சில நிகழ்வுகளுக்குப் பிறகு கருணை கோரி பிரையன் கோரிக்கை விடுத்த போதிலும், நீதிபதி டோமுக்கு பரோல் இல்லாமல் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கிறார். பிரையன் எஃப். பி. ஐ-யில் இருந்து பதவி விலகுகிறார், டோம் ஒரு சிறைப் பேருந்தில் ஏறி அவரை லோம்போக் சிறைச்சாலை அழைத்துச் செல்வார். பேருந்து சாலையில் இறங்கும்போது, பிரையன், மியா, லியோ மற்றும் சாண்டோஸ் ஆகியோர் தங்கள் கார்களில் வந்து அதைத் தடுக்கிறார்கள். கதை மாந்தர்கள்
தயாரிப்புஆரம்ப வேலைகள்வின் டீசலின் கௌரவத் தோற்றத்திற்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான வரவேற்புக்குப் பிறகு, யுனிவர்சல் அதன் அசல் நட்சத்திரங்களுடன் தொடரை திறம்பட புதுப்பிப்பதில் நம்பிக்கை கொண்டிருந்தது.[5] டீசல், பால் வாக்கர் மற்றும் அசல் படத்தின் பல நடிகர்கள் தங்கள் பாத்திரங்களில் நடிப்பதாக சூலை 2007 இல் இதற்கான அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்புமுதன்மைப் புகைப்படம் எடுத்தல் பிப்ரவரி 2008 இல் தொடங்கி சூலை மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டொமினிகன் குடியரசு உள்ளிட்ட படப்பிடிப்பு இடங்களில் முடிவடைந்தது. இந்தப் படத்திற்காகத் தெற்கு கலிபோர்னியாவின் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் சுமார் 240 கார்கள் கட்டப்பட்டன.[6] இசைஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பாடலுக்கு இசையமைத்தவர் பிரையன் டைலர். இவர், 20th செஞ்சுரி ஃபாக்ஸில் நியூமன் ஸ்கோரிங் ஸ்டேஜில் தனது இசையைப் பதிவு செய்தார்.[7] 78 நிமிடங்களுக்கு மேலான இசையுடன் இந்த இசைத் தொகுபு வேரேஸ் சரபாண்டே ரெக்கார்ட்ஸால் குறுவட்டில் வெளியிடப்பட்டது. வெளியீடுஇது முதலில் சூன் 5,2009 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் மற்றொரு யுனிவர்சல் திரைப்படமான லேண்ட் ஆஃப் தி லாஸ்ட் இன் வெளியீடு காரணமாக ஒரு வாரம் கழித்து சூன் 12 இல் ஒத்திவைக்கப்பட்டது.[8][9] இந்த நாள் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக ஏப்ரல் 3,2009 அன்று மாற்றியமைக்கப்பட்டது.[10] தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் டி-பாக்ஸ் மோஷன் பின்னூட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட முதல் இயக்க-மேம்படுத்தப்பட்ட திரையரங்குப் படம் இதுவாகும்.[11] வரவேற்புதிரைப்பட நுழைவுச் சீட்டு விற்பனையகம்ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் வெளியான முதல் நாளில் $30.6 மில்லியன் வசூலித்தது, மேலும் வார இறுதியில் பாக்ஸ் ஆபிசில் $72.5 மில்லியனுடன் முதலிடத்தைப் பிடித்தது.[12][13] இந்தப் படம் 2009 இன் தொடக்க வாரத்தில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படங்களில் ஆறாவது இடம் பிடித்தது. குறிப்புகள்
புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia