அகமது பின் அப்துல்லா பாலாலா
அகமது பின் அப்துல்லா பாலாலா ஐதராபாத்து நகரைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தெலுங்காணா சட்டமன்றத்தின் மலக்பேட் சட்டமன்ற உறுப்பினராவார். இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியை சேர்ந்தவர். இவர் 2009 இல் முதல் மலக்பேட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2][3] அரசியல் வாழ்க்கை2009 சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் வேட்பளராக போட்டியிட்ட அகமது தன்னை எதிர்த்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் முகம்மது முசாபர் அலிகானை தோற்கடித்தார். முன்னதாக இவரது கட்சி 1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு தேர்தல்களில் இந்த தொகுதியில் தோல்வியடைந்தது. 2011 டிசம்பர் மாதம், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் பாட்ஷாஹி அஷுர்கானா இடத்திற்கு சொந்தமான கடைகள் மற்றும் கட்டிடங்களை இடிக்க முயன்ற போது பாலாலா மற்றும் சையத் அகமது பாஷா குவாட்ரி மற்றும் பிற [[அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் சட்டமன்ற உதுப்பினர்கள் அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர். இந்த நிகழ்வு அப்போதைய சூழலில் நகரத்தில் பதட்டங்களுக்கு வழிவகுத்தது. 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையின் பூஜ்ஜிய நேரத்தில் கோடை மாதங்களின் அதிக வெப்பநிலை காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தலைகவசம் அணிவது காட்டாயம் என்ற விதிகளை தளர்த்துமாறு பாலாலா அரசாங்கத்தை வலியுறுத்தினார். "தலைகவசம் வாகன ஓட்டிகளுக்கு வெப்பத்தை மேலும் அதிகரிக்கும்" என்றும் இவர் கூறினார். மேற்கோள்கள்
குறிப்புகள் |
Portal di Ensiklopedia Dunia