அசிட்டிக் பார்மிக் நீரிலி
அசிட்டிக் பார்மிக் நீரிலி அல்லது எத்தனாயிக் மெத்தனாயிக் நீரிலி (Acetic formic anhydride, or ethanoic methanoic anhydride) என்பது C3H4O3, அல்லது H3C-(C=O)-O-(C=O)H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தில் (H3C-(C=O)OH) இருந்தும் பார்மிக் அமிலத்தில் (H(C=O)OH) இருந்து ஒரு மூலக்கூறு நீர் நீக்கினால் உருவாகும் கலப்பு நீரிலியாக இச்சேர்மம் பார்க்கப்படுகிறது. சோடியம் பார்மேட்டு மற்றும் அசிட்டைல் குளோரைடு இரண்டும் டை எத்தில் ஈதரில் 23 – 27 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் அசிட்டிக் பார்மிக் நீரிலி உருவாகிறது.[2] பயன்கள்பார்மைல் புளோரைடு தயாரிக்க உதவும் தொடக்கப் பொருளாகவும் , அமீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்ககால்களை பார்மைலேற்றம் செய்ய உதவும் முகவராகவும் அசிட்டிக் பார்மிக் நீரிலி பயன்படுகிறது.[2] மேற்கோள்கள்
இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia