அசினிட்டோபாக்டர் பௌமானிஅசினிட்டோபாக்டர் பௌமானி (Acinetobacter baumannii) என்பது சந்தர்ப்பவாத நோய் உண்டாக்கவல்ல கிராம் சாயமேற்காத பாக்டீரியா ஆகும். இது நீண்ட நாட்களாக மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளில் மிகமோசமான நோயை உண்டாக்க வல்லது. இதனைக் கட்டுப்படுத்த பல நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளாலும் முடியாது. அனைத்து மருந்துகளுக்கும் இது எதிர்ப்பு சக்தியைப் பெற்றுள்ளது.[1] இது சந்தர்ப்பவாத தொற்றுக்கிருமி ஆகும்.[2] நோய் எதிர்ப்பு ஆற்றல் உள்ள மனிதர்களில் இக்கிருமி நோய் உண்டாக்காது. ஆனால் அவர்களின் உடலில் தொற்றிக் கொள்ளும் இக்கிருமி அவர்கள் மூலமாக நோய்எதிர்ப்பாற்றல் குறைந்த நோயாளிகளை மிகக்கடுமையாகத் தாக்குகிறது.[3] குளிர்பதனம் செய்யப்பட்ட மருத்துவமனை அறைச் சுவர்களில் இந்த பாக்டீரியா 5 மாதங்கள் வரை வாழக்கூடியது.[4] ஈராக் போரில் காயமுற்று மருத்துவமனையில் இருந்த அமெரிக்க வீரர்கள் பலருக்கு இக்கிருமித் தொற்று ஏற்பட்டதால் இது ஈராக்கிபாக்டர் எனவும் அழைக்கப்படுகிறது.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia