அஞ்சலி நாயர் (1995 இல் பிறந்த நடிகை)
அஞ்சலி நாயர், இந்தியாவின், கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட, தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.நெடுநல்வாடை (2019) என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து, டாணாக்காரன் (2022) மற்றும் எண்ணித்துணிக (2022) உள்ளிட்ட குறிப்பிடக்கூடிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தொழில்அஞ்சலி, தமிழில் 2019-ம் ஆண்டு வெளியான நெடுநல்வாடை என்கிற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார், இப்படத்தில் இயல்பான கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடமும் திரைவிமர்சகர்களிடமும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றுள்ளார், தி இந்து பத்திரிகையில் ஒரு விமர்சகர் இவரின் நடிப்பை ''சிறந்த வெளிப்பாடு'' என்று பாராட்டியுள்ளார்.[1] மேலும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ஒரு விமர்சகர், "அறிமுக நடிகை அஞ்சலி நாயர் இந்தப் படத்தை தாங்கி பிடித்துள்ளார்." என்று குறிப்பிட்டார், அதே நேரத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா , "அஞ்சலியின் கண்ணியமான நடிப்பால் இப்படம் ஆதரிக்கப்பட்டுள்ளது" என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளது.[2][3] 2022 ம் ஆண்டில் , அஞ்சலி மூன்று தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு முன்னதாகவே மலையாள பின்னணியைக் கொண்ட அஞ்சலி நாயர் என்ற பெயரில் இன்னொரு நடிகையும் இருப்பதால், இவரது பெயரை மாற்ற சொன்னதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், அதற்கு மறுத்தும் விட்டது குறிப்பிடத்தக்கது.[6] திரைப்படவியல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia